சத்யாவை அடுத்து நம்ம பஞ்சுவும் ஆனார் ஹீரோயின்!

சென்னை: முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானவில் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியானவர் நட்சத்திரா நாகேஷ். அதன்பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

பொது விழாக்கள், சினிமா விழாக்களையும் தொகுத்து வழங்கினார். சேட்டை, வாயை மூடி பேசவும், மிஸ்டர் லோக்கல் படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தார். வாணி ராணி, லட்சுமி ஸ்டோர் தொடர்கள் மூலம் சீரியல் நடிகை ஆனார். தற்போது லட்சுமி ஸ்டோர்ஸில் பாக்ய லட்சுமியாக ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Nakshathra Nagesh becomes heroine

பஞ்சு, பட்டர் பிஸ்கட் என்று ஹீரோவுடன் கொஞ்சிக் கொண்டிருக்க தற்போது வணிகன் என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார். ஆனந்த் நாக் கதாநாயகனாக நடித்துள்ளார். மற்றும் சார்லி, புச்சட்னி ராஜ்மோகன், கிருத்திகா பாலா ஆகியோர் நடித்துள்ளனர். சுரேஷ்குமார் இசை அமைத்துள்ளார், அகஸ்டின் இளையராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வி.பி.டேனியல் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: இது ஒரு எதார்த்தமான திரில்லர் படம். தற்போது சமூகத்தில் நடந்துகொண்டிருக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை இதில் கையாண்டிருக்கிறோம். இந்த படத்தின் பாடல்களை கேட்ட யுவன்சங்கர் ராஜா, இசையமைப்பளார்களை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், தனது யூ1 ரெக்கார்டஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியிருக்கிறார் அது எங்கள் படக்குழுவினருக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறோம். என்றார்.

இதே போன்று தெய்வ மகள் சத்யாக நடித்து சின்னத்திரை நயன்தாராவாக ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் வாணி போஜன். கல்யாணம் முதல் காதல்வரை மூலம் பிரியா பவானி சங்கர் என்று சின்னத்திரை நாயகிகள் பெரிய திரையில் கோலொச்ச பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு சென்று தற்போது மீண்டும் ஹீரோயின் ஆன பஞ்சு மிட்டாய் இல்லை இல்லை நட்சத்திரா நாகேஷ் திரையில் ஜொலிக்க வாழ்த்துவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X