வருங்கால கணவருடன் வளைத்து வளைத்து போட்டோ எடுக்கும் சீரியல் நடிகை.. திணறும் இன்ஸ்டா!

சென்னை: பிரபல சீரியல் நடிகையான நக்ஷத்ரா தனது வருங்கால கணவருடன் படு நெருக்கமாய் நடத்தியிருக்கும் போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது.

பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றியவர் நக்ஷத்ரா. இவர் லட்சுமி ஸ்டோர்ஸ், நாயகி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார்.

சேட்டை, வாயை மூடி பேசவும், இரும்பு குதிரை, நம்பியார், மிஸ்டர் லோக்கல் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

காதலருடன் நிச்சயதார்த்தம்

காதலருடன் நிச்சயதார்த்தம்

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது காதலர் ராகவுடன் நக்ஷத்ராவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தங்களின் நிச்சயதார்த்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார் நக்ஷத்ரா.

திருமண தேதி

திருமண தேதி

அதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தனர். இன்னும் திருமண தேதி அறிவிக்கப்படாத நிலையில் இருவரும் நெருக்கமாக பல்வேறு போட்டோ ஷுட்டுக்களை அடித்து விடுகின்றனர்.

முதன் முதலில்..

முதன் முதலில்..


பீச்சில் செம ரொமான்டிக்காக எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்தார் நக்ஷத்ரா. தாங்கள் முதன் முதலில் ஜோடியாக எடுத்த போட்டோக்கள் என்று கூறியிருந்தார்.

செம்ம க்யூட்..

செம்ம க்யூட்..


அதன் பிறகு, தொடர்ந்து இருவரும் பல போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சிவப்பு நிற லெஹாங்காவில் தனது வருங்கால கணவருடன் செம்ம க்யூட்டாக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் நக்ஷத்ரா.

மணப்பெண் கோலத்தில்

மணப்பெண் கோலத்தில்

இருவரும் கட்டியணைத்தப்படி இருக்கும் அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து பட்டு சேலையில் மணப்பெண் கோலத்தில் போட்டோ ஷுட் நடத்தினார் நக்ஷத்ரா.

காட்டன் சேலையில்..

காட்டன் சேலையில்..

தற்போது தனது வருங்கால கணவர் வேட்டி மற்றும் காட்டன் ஜிப்பாவிலும் நக்ஷத்ரா காட்டன் சேலையிலும் செம க்யூட்டாக போட்டோ ஷுட் நடத்தியுள்ளனர். நக்ஷத்ராவின் இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டுள்ள இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், ஒரே போட்டோ ஷுட்தான் போல என கிண்டலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: nakshathra nagesh photo shoot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X