நட்சத்திரமா ஜொலிக்கும் நக்ஷத்ரா.. தீயாய் பரவும் திருமண நிச்சயதார்த்த வீடியோ.. முத்தங்கள் வேற!
சென்னை: சின்னத்திரை நடிகை நக்ஷத்ராவின் திருமண நிச்சயதார்த்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த ஜனவரி 26ம் தேதியன்று நக்ஷத்ராவுக்கும் அவரது காதலர் ராகவ்விற்கும் கோலாகலமாக திருமண நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது.
அந்த போட்டோக்களை ஷேர் செய்து வைரலாக்கிய நிலையில், தற்போது நிச்சயதார்த்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

லக்ஷ்மி ஸ்டோர்ஸ்
சின்னத்திரை நடிகையான நக்ஷத்ரா நாகேஷ் லக்ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய புகழை அடைந்தார். ஜோடி நம்பர் 1, வாணி ராணி, ரோஜா, மின்னலே, நாயகி மற்றும் திருமகள் என ஏகப்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார் நக்ஷத்ரா.

சிவகார்த்திகேயன் படத்தில்
சின்னத்திரை மட்டுமின்றி சினிமாவிலும் பல படங்களில் சிறிய ரோல்கள் முதல் ஹீரோயினாக வரை நடித்துள்ளார் நக்ஷத்ரா. சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்தில் சீரியல் நாயகியாகவே நடித்து அசத்தியிருப்பார். இரும்பு குதிரை, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

காதலர் ராகவ்
கடந்த ஜனவரி 22ம் தேதி தனது காதலர் ராகவ்வை வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார் நடிகை நக்ஷத்ரா நாகேஷ். காதலருடன் வளைத்து வளைத்து எடுத்த ஏகப்பட்ட போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கினார். கடந்த ஜனவரி 26ம் தேதியன்று இருவருக்கும் குடும்பத்தினர் சூழ கோலாகலமாக நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

மோதிரம் மாத்தியாச்சு
மாலை மாற்றி, மோதிரம் போட்டு உறவினர்கள், நண்பர்கள் சூழ பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழா போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்துக்களை பெற்றார் நடிகை நக்ஷத்ரா.
நிச்சயதார்த்த வீடியோ
இந்நிலையில், இன்று தனது நிச்சயதார்த்த வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராமில் மிகுந்த சந்தோஷத்துடன் பகிர்ந்து, மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் சீக்கிரமே திருமணத்திற்கு ரெடி என்பதை தெரிவிக்கும் விதமாக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். நக்ஷத்ராவின் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இந்த வீடியோவிற்கு லைக் போட்டு வருகின்றனர்.

கன்னத்தில் முத்தம்
திருமண நிச்சயதார்த்த வீடியோவில் தங்க நிற சேலையை அணிந்து கொண்டு சும்மா தேவதை போலவே ஜொலிக்கிறார் நக்ஷத்ரா. தனது வருங்கால மனைவியின் நெற்றியில் ராகவ் முத்தமிடுவதும், ராகவ்வின் கன்னத்தில் நக்ஷத்ரா முத்தமிடுவதும் என கொண்டாட்டத்துக்கும் காதலுக்கும் குறைவில்லாமல் இருக்கிறது இந்த வீடியோ.


Click it and Unblock the Notifications











