பிக்பாஸ் 5 ல் நானா ?...அட போங்கப்பா...வதந்திகளை மறுத்த நகுல்

சென்னை : தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 4 சீசன்களும் மிகுந்த அமோக வெற்றியை பெற்றது. லாக்டவுன் முடிந்த பிறகு நடத்தப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்பதால் 4 வது சீசனுக்கு கூடுதல் வரவேற்பு கிடைத்தது.

இதில் ஆரி அர்ஜூனன் வெற்றி பெற்றார். இந்த நிகழ்ச்சி மூலம் ஆரிக்கு உலகம் முழுவதும் பெரிய அளவில் ரசிகர்கள் கிடைத்தனர். தற்போது பிக்பாசின் 5 வது சீசனை துவக்குவதற்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் செய்து வருகின்றனர்.

ஜூன் மாதத்தில் பிக்பாஸ் 5

ஜூன் மாதத்தில் பிக்பாஸ் 5

வழக்கமாக துவங்கும் ஜூன் 2 வது அல்லது 3வது வாரத்தில் பிக்பாஸ் தமிழ் 5 வது சீசனை துவக்க திட்டமிட்டுள்ளனர். ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் பற்றிய உத்தேச பட்டியல் என சமீபத்தில் ஒரு பட்டியல் சமூக வலைதளங்களில் வெளியானது.

உத்தேச போட்டியாளர்கள் பட்டியல்

உத்தேச போட்டியாளர்கள் பட்டியல்

இதில் நடிகர் நகுல், குக் வித் கோமாளி கனி, சுனிதா கோகாய், சூப்பர் சிங்கர் சாம் விஷால், மன்சூர் அலி கான் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் இடம்பெற்றன. இந்த வதந்தியான பட்டியல் பற்றி நடிகர் நகுல் வெளிப்படையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

பிக்பாசில் நானா...நகுல் மறுப்பு

இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள நகுல், இதுவரை நிகழ்ச்சி நடத்துபவர்கள் யாரும் இது பற்றி தன்னிடம் பேசவில்லை என தெளிவபடுத்தி உள்ளார். அப்படியே அவர்கள் வந்து கேட்டாலும் பிக்பாசில் பங்கேற்க தனக்கு விருப்பமில்லை எனவும் நகுல் தெரிவித்துள்ளார்.

வீடியோ மூலம் நகுல் விளக்கம்

வீடியோ மூலம் நகுல் விளக்கம்

இது குறித்து நகுல் வெளியிட்ட வீடியோவில், பிக்பாஸ் 5 சீசனில் நான் இணைந்துள்ளது போன்ற பல பதிவுகளை பலர் எனக்கு அனுப்புகிறார்கள். இது வரை யாரும் என்னிடம் வந்து பேசவில்லை. அதுவும் இல்லாமல் தற்போது தான் எனக்கு மகள் பிறந்துள்ளாள். அவளை விட்டு எப்படி செல்வேன் நான் என கேட்டுள்ளார்.

மீண்டும் நடிக்க வாய்ப்பு

மீண்டும் நடிக்க வாய்ப்பு

நகுலுக்கு சமீபத்தில் தான் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு அகிரா என பெயரிட்டுள்ளனர். இந்த மகிழ்ச்சியான தருணத்தை சிறிது கூட தான் இழக்க தயாராக இல்லை என நகுல் கூறி உள்ளார். அது மட்டுமின்றி நகுல் மீண்டும் நடிக்கவும், பின்னணி பாடவும் துவங்கி உள்ளார்.

காதலில் விழுந்தேன், மாசிலாமணி ஆகிய படங்களைத் தொடர்ந்து எரியும் கண்ணாடி என்ற படத்தில் மூன்றாவது முறையாக நடிகை சுனைனாவுடன் இணைந்து நகுல் நடிக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X