விவேக் நினைவாக மரக்கன்று வைத்த நகுல்...வைரலாகும் வீடியோ

சென்னை : 2003 ம் ஆண்டு டைரக்டர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நகுல். இந்த படத்தில் அவர் முதல் முறையாக பின்னணியும் பாடினார்.

Recommended Video

நடிகர் விவேக் நினைவில் மாமரம் நட்டு வைத்த நடிகர் Nakkhul | RIPVivekh

இதைத் தொடர்ந்து காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம், நான் ராஜாவாக போகிறேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, வல்லவன் உள்ளிட்ட படங்களில் பல சூப்பர்ஹிட் பாடல்களையும் நகுல் பாடி உள்ளார்.

விவேக்குடன் நடித்த நகுல்

விவேக்குடன் நடித்த நகுல்

நகுல் அறிமுகமான பாய்ஸ் படத்தில் விவேக் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவேயில்லை. இந்நிலையில் நேற்று விவேக் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சில வீடியோக்களை நகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

விவேக் நினைவாக மரக்கன்று

விவேக் நினைவாக மரக்கன்று

அத்துடன் ஒரு வீடியோவில், விவேக் தனி ஆளாக இருந்து 33 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை நட்டுள்ளார். அது சாதாரண விஷயமல்ல. அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது நினைவாக மரக்கன்று ஒன்றை நட போகிறோம் னெ ஒரு வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.

எங்கள் இதயங்களில் இருப்பீர்கள்

தொடர்ந்து தான் மரக்கன்று ஒன்றை நடும் வீடியோவையும் நகுல் பதிவிட்டார். அத்துடன், விவேக் சார் நினைவாக நான் மாங்கன்று ஒன்றை நட்டுள்ளேன். அதற்கு மங்கலம் என பெயரிட்டுள்ளேன். உங்களை நாங்கள் மிஸ் செய்கிறோம் சார். நீங்கள் எப்போதும் எங்களின் இதயங்களில் இருப்பீர்கள். அழகிய நினைவுகளை தந்ததற்கு நன்றி எனவும் கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

மரக்கன்றிற்கு பெயர் மங்கலம்

மரக்கன்றிற்கு பெயர் மங்கலம்

பாய்ஸ் படத்தில் மங்கலம் என்ற கேரக்டரில் தான் விவேக் நடித்திருந்தார். அதனால் அவரது நினைவாக தான் நடும் மரக்கன்றிற்கு அந்த பெயரையே நகுல் வைத்துள்ளார். நகுல் பதிவிட்ட இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்து, லைக் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X