உலக தாய்ப்பால் வாரம்...நகுல் மனைவி பதிவிட்ட எமோஷனல் போஸ்ட்
சென்னை : ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நகுல். பின்னணி பாடகர், நடிகர் என பல திறமைகளைக் கொண்ட நகுல், பாய்ஸ் படத்திற்கு பிறகு தனது தோற்றத்தை, ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றினார்.
ஆளே மாறிப் போய் ஸ்லிம்மான நகுல், காதலில் விழுந்தேன் படத்தில் ஸ்டைலீஷ் ஹீரோவாக மாஸ் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு மாசிலாமணி, கந்தக்கோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடைசியாக 2018 ல் செய் படத்தில் நடித்தார்.

மீண்டும் பின்னணி பாடும் நகுல்
அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, வல்லவன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில், சூப்பர் ஹிட் பாடல்கள் பலவற்றை பாடி உள்ளார். 2016 ல் தனது நீண்ட நாள் தோழியான ஸ்ருதியை திருமணம் செய்து கொண்டார். 2018 க்கு பிறகு பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாமல் இருந்த நகுல், நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது சில படங்களில் மீண்டும் பின்னணி பாடி வருகிறார்.

பிபி ஜோடிகளில் நகுல்
அத்துடன் எரியும் கண்ணாடி, வாஸ்கோ ட காமா, பாய்ஸ் 2 ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். அத்துடன் தற்போது விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். நகுல், தனது மனைவியுடன் இணைந்து பாடி பல மியூசிக் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அவ்வப்போது இவர்கள் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அசத்தி வந்தனர்.

ஃபோட்டோக்களை பகிரும் நகுல்
இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு கொரோனாவின் போது நகுல் - ஸ்ருதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அகிரா என அந்த குழந்தைக்கு பெயரிட்டனர். தனது மகளுடன் கொஞ்சி விளையாடும் ஃபோட்டோக்கள், வீடியோக்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

ஸ்ருதியின் எமோஷனல் போஸ்ட்
இந்நிலையில் அகிராவின் முதல் பிறந்தநாளை நகுல் மற்றும் ஸ்ருதி சமீபத்தில் மிக எளிமையாக கொண்டாடினர். இந்நிலையில் தாய்பால் வாரத்தை முன்னிட்டு, கணவர் நகுல் உடனிருக்க, மகளுக்கு பாலூட்டும் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, எமோஷனலான கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.
Recommended Video

ஓராண்டாகி விட்டது
அதில், அகிராவிற்கு ஒரு வயது ஆகி விட்டது. நாளும் நகுலும் பெற்றோர் ஆகியும் ஓராண்டாகி ஆகி விட்டது. நானும் அவளுக்கு தாய்பாலூட்ட ஆரம்பித்தும் ஒரு வருடம் நிறைவடைந்து விட்டது. இது ஒரு அழகான ரோலர் கோஸ்டர் அனுபவம். இந்த ஒரு வருடத்தில் தாய்ப்பால் ஊட்டுவது தொடர்பாக நான் கற்றுக் கொண்ட சில விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு இதை பதிவிட்டுள்ளேன் என குறிப்பிட்டு பாலூட்டுவது தொடர்பான பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

என் பின்னால் இருக்கும் நகுல்
மேலும், பாலூட்டுவது பெண்களுக்கான விஷயம் அல்ல. ஆண்களும் அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். எப்போதும் என் பின்னால் இருக்கும் எனது அன்பான கணவர் நகுலுக்கு எனது இறுக்கமான அணைப்பு. என்னால் என்ன செய்ய முடியும் என நான் மறந்து போகும் சமயங்களில் என்னை ஊக்கப்படுத்துகிறவர். அகிரா மற்றும் நகுல் லவ் யூ 3000 என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











