மீண்டும் இணையும் காதலில் விழுந்தேன் ஜோடி.... அந்த மேஜிக் நடக்குமா!
சென்னை: நகுலும் சுனைனாவும் பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைகின்றனர்.
காதலில் விழுந்தேன், மாசிலாமணி படங்களில் ஜோடியாக நடித்த நகுலும் சுனைனாவின் தற்போது எரியும் கண்ணாடி திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைகின்றனர்.

ஏஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில் சவுண்ட் எஞ்சினியராக பணியாற்றியவர் சச்சின் தேவ். இப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். அவர் ஆக்ஷன் காட்சிகள் இல்லாத எரியும் கண்ணாடி என்ற ரொமாண்டிக் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் நகுல் ஒரு கலை புதுப்பிப்பாளராக நடிக்கிறார். சிற்பக்கலை, ஓவியக்கலை, எழுத்து வடிவங்கள் போன்றவற்றை பாதுகாப்பது. அவற்றை புதுப்பிப்பது, சேதம் ஏற்பட்டிருந்தால் சரி செய்வது என பல நுணுக்கமான வேலைகளை செய்வாராம்.
இந்த துறையில் மிகக் குறைவானவர்களே பணியாற்றும் நிலையில், இதை கருப்பொருளாக எடுத்துக்கொண்டு கதையை உருவாக்கியிருப்பது பாராட்ட வேண்டிய விஷயம். எமோஷனல் ரொமாண்டிக் படமாக இருந்தாலும் படத்தில் நடனக் காட்சி எதுவும் இல்லையாம். நாக்க முக்கா.. பாடலில் அந்த ஆட்டம்போட்ட நகுலை ஆடாமல் நடிக்கவைப்பதும் சவால்தான்.
இப்படத்தில் மனிஷா கொய்ராலா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அபர்னா கோபினாத் என்ற மலையாள நடிகை இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். சுரேஷ் மேனனும் நடிக்கிறார். இப்படத்தில் நடிகை ரேவதி சுனைனாவின் அம்மாவாக நடிக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார், வைரமுத்து பாடல் எழுதுகிறார்.


Click it and Unblock the Notifications











