நாளைய தீர்ப்பு டூ பீஸ்ட்.... தளபதி விஜய் கடந்து வந்த பாதை !

சென்னை : தளபதி... தளபதி... என நாம் தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் விஜய்க்கு இந்த பெயரும் புகழும் அத்தனை எளிதில் கிடைத்து விடவில்லை.

Recommended Video

Thalapathy Vijay Unknown : Anirudhயை கலாய்க்கும் Thalapathy | #HBDTHALAPATHYVIJAY

பல சறுக்கல்கள், பல கேலி கிண்டல், பல வலிகள், பல விமர்சனங்களைத் தாண்டி கிடைத்தது.

இன்று தனது 47 வது பிறந்த நாளை கொண்டாடும் தளபதி விஜய் கடந்து வந்த பாதையை சற்று திரும்பி பார்க்கலாம்.

அறிமுகம்

அறிமுகம்

நடிப்பின் மீது ஆர்வம் ஆசை, ஏன் தீராத காதல் இருந்ததால் திரைத்துறையில் தனது தடத்தை பதிக்க நுழைந்தார் விஜய். தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் . இத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை.

இளைய தளபதி

இளைய தளபதி

விஜய்காந்துடன் செந்தூரப்பாண்டி படத்தில் இணைந்து நடித்திருந்தார். பின்னர், ரசிகன் படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில்தான் இளைய தளபதி என்ற அடைமொழி விஜய்க்கு வழங்கப்பட்டது. இந்த திரைப்படத்தை அடுத்து தேவா, ராஜாவின் பார்வையிலே,சந்திரலேகா,கோயம்புத்தூர் மாப்பிள்ளை போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.

கேலி பேச்சு

கேலி பேச்சு

இவரது நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியானாலும், எந்த திரைப்படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தரவில்லை. இதனால் பலரின் கேலிக்கும் கிண்டலுக்கும் விஜய் உட்படுத்தப்பட்டார். தந்தை எஸ்.ஏ. சந்திர சேகரால் தான் விஜய் பல படங்களில் நடிக்கிறார் என்றும் நடிப்பு பேசும் படி இல்லை என்றும் சினிமாவட்டாரத்தில் பல விமர்சனங்கள் எழுந்தன.

ஏராளமான ரசிகர்கள்

ஏராளமான ரசிகர்கள்

விக்ரம் இயக்கத்தில் வெளியான பூவே உனக்காக வெற்றித்திரைப்படமாக மாறி விஜய்க்கு நற்பெயரை பெற்றத்தந்தது. இப்படம் ஏராளமான பெண் ரசிகைகளை விஜய்க்கு பெற்றுத்தந்தது. அடுத்து லவ் டுடே , ஒன்ஸ்மோர், நேருக்கு நேர் என பல திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடின.

இன்று வரை மரியாதை

இன்று வரை மரியாதை

பாசில் இயக்கிய காதலுக்கு மரியாதை, காதலை வேறு விதமாக சொல்லும் திரைப்படமாக அமைந்தது. மேலும், தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் இத்திரைப்படம் பெற்றுத்தந்தது. இன்று வரை காதலை கொண்டாடும் திரைப்படமாக இப்படம் இருந்து வருகிறது.

50 கோடி வசூல்

50 கோடி வசூல்

விஜய்யை வேறு கோணத்தில் நமக்கு காட்டிய திரைப்படம் கில்லி. இத்திரைப்படம் தமிழ் திரைப்படச்சந்தை வரலாற்றில் 50 கோடிக்கும் அதிகமான வசூல் செய்த முதல் திரைப்படம் இதுவாகும்.

போக்கிரியாக மனதில் இடம்

போக்கிரியாக மனதில் இடம்

பிரபுதேவா இயக்கிய போக்கிரி விஜய் திரைப்பயணத்தில் ஒரு மைல்லாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் விஜய் போக்கிரியாக நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். அழகிய தமிழ்மகன்,வேலாயுதம், நண்பன்,துப்பாக்கி, தலைவா, ஜில்லா, புலி என தொடர்ச்சியாகபல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

ஹிட் திரைப்படங்கள்

ஹிட் திரைப்படங்கள்

தெறி திரைப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும், பாசமிகு தந்தையாகவும் நடித்து மிரட்டி இருப்பார் விஜய் . இத்திரைப்படத்தை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடினர். அடுத்ததாக மெர்சல், சர்கார், பிகில் மாஸ்டர் அடுத்தடுத்து பல ஹிட் திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து மகிழ்ந்து வருகிறார் விஜய்.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

விஜய்யின் 65-வது திரைப்படமாக பீஸ்ட் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தை தெறிக்கவிட்டுள்ளது. ஒரு பக்கம் விஜய்யின் பிறந்தநாள் மறுபக்கம் பீஸ்ட் கொண்டாட்டம் என ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X