»   »  நலன் குமாரசாமி இயக்கத்தில் மீண்டும் ஹீரோவாகும் வடிவேலு!

நலன் குமாரசாமி இயக்கத்தில் மீண்டும் ஹீரோவாகும் வடிவேலு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தெனாலிராமன், எலி படங்களின் தோல்விக்குப் பிறகி, மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் வடிவேலு.

சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இந்தப் புதிய படத்தை இயக்குகிறார்.

Nalan Kumarasamy to direct Vadivelu?

எலி படத்தின் படுதோல்விக்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்த வடிவேலு, தன் அடுத்த படத்துக்கான கதைகளைத் தீவிரமாகக் கேட்டு வந்தார்.

இந்நிலையில், வடிவேலு அடுத்ததாக சூதுகவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நலன் குமாரசாமி தற்போது ‘காதலும் கடந்து போகும்' என்னும் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் விஜய் சேதுபதி, மடோனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

காதலும் கடந்து போகும் வெளியான பிறகு வடிவேலு நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

English summary
Reports suggest that actor Vadivelu is going to act in Nalan Kumarasamay direction
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil