வெறும் கூரையை பார்த்து ஏங்கிய ராமராஜன்.. 4 தியேட்டர்கள் வாங்க வைத்ததே நான் தான்.. நளினி பேட்டி!

சென்னை: நடிகர் ராமராஜனின் முன்னாள் மனைவியான நடிகை நளினி சமீபத்தில் அளித்த பேட்டி தான் தற்போதைய சோஷியல் மீடியாவின் ஹாட் டாபிக்காக மாறி உள்ளது.

1981ல் ரஜினிகாந்த் நடித்த ராணுவ வீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நளினி. ஓம் சக்தி, உயிருள்ளவரை உஷா, சரணாலயம், மனைவி சொல்லே மந்திரம், தங்கைக்கோர் கீதம், நூறாவது நாள், வீட்டுக்கு ஒரு கண்ணகி, எழுதாத சட்டங்கள், நன்றி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

சிம்பு ஹீரோவாக அறிமுகமான காதல் அழிவதில்லை படத்தில் ஹீரோயின் சார்மியின் அம்மாவாக நடித்த நளினி சின்னத்திரை தொடர்களில் அம்மாவாகவும், மாமியராகவும் ஏகப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வருகிறார்.

Nalini says she pushed Ramarajan to buy 4 Theaters in a recent interview

ராமராஜனின் முன்னாள் மனைவி: நடிகர் ராமராஜன் படங்களை பார்த்தே அவர் மீது கிரஷ் வந்த நிலையில், அவருடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்த நிலையில், 1987ம் ஆண்டு ராமராஜனை திருமணமும் செய்துக் கொண்டார் நடிகை நளினி.

கிராமத்து மண் சார்ந்த படங்களில் வெறும் அரைக்கால் சட்டை அணிந்து கொண்டு மேல் சட்டை போடாமல் வெறும் துண்டு மட்டும் போட்டுக் கொண்டு எங்க ஊரு பாட்டுக்காரனாக வந்து செண்பகமே என பாட்டுப் பாடியே ஏகப்பட்ட ரசிகர்களை குறிப்பாக ரசிகைகளை கவர்ந்தவர் ராமராஜன்.

Nalini says she pushed Ramarajan to buy 4 Theaters in a recent interview

பிரிந்தாலும் மறக்காத நினைவுகள்: கடந்த 2000ம் ஆண்டு நடிகர் ராமராஜனை நளினி பிரிந்த நிலையிலும், இதுவரை அவர்கள் இருவரும் இடையே மோசமான பிரச்சனைகளோ விவாதங்களோ வெடித்ததே இல்லை.

சமீபத்திய பேட்டியில் கூட இன்னமும் ராமராஜனை காதலிப்பதாக பேசியுள்ளார் நடிகை நளினி. மேலும், நள்ளிரவு எப்போது ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்தாலும், ரசம் சாதத்தைத் தான் விரும்பி சாப்பிடுவார் என்றும் ரசமும் அப்பளமும் இருந்தால் போதும் அவருக்கு என்றும் அந்த பேட்டியில் நளினி ஏகப்பட்ட சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார்.

Nalini says she pushed Ramarajan to buy 4 Theaters in a recent interview

ஆரம்பத்தில் கூரை போட்ட கொட்டாய் தியேட்டரில் தனது படங்கள் ஓடுவதை பார்த்து ஃபீல் பண்ண ராமராஜன் எப்படியாவது ஒரு தியேட்டர் கட்ட வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தார்.

அவரை உசுப்பேற்றி ஒன்றுக்கு 4 தியேட்டர்கள் வாங்க வைத்தேன் என நடிகை பேசியுள்ள பேட்டியை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். மீண்டும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வரும் ராமராஜன் சாமானியன் படத்தை விரைவில் வெளியிட உள்ள நிலையில், இன்னொரு படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X