ஹய்யா மாட்டிக்கிட்டாரு பவர்ஸ்டாரு.. டைரக்டர் போல பேசி மடக்கிய நாமக்கல் போலீஸ்!

By Sudha

Power Star Srinivasan
நாமக்கல்: அந்தமானுக்குப் படப்பிடிப்புக்குப் போனதாக போலீஸாரிடமே டுபாக்கூர் விட்டார் பவர்ஸ்டார் சீனிவாசன். ஆனால் இயக்குநர் போல பேசி பட வாய்ப்பு தருவதாக கூறி பேசி பவர்ஸ்டாரை கையும் களவுமாக கண்டுபிடித்து விட்டனர் நாமக்கல் போலீஸார். இதையடுத்து போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக பவர் ஸ்டார் கூறியுள்ளாராம்.

சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில்தான் வசித்து வருகிறார் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் திருச்செங்கோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் பொன்னுசாமி என்பவரிடம் 2008ம் ஆண்டு ரூ. 2 லட்சம் கடன் வாங்கினார். ஒரு ஆண்டுக்கு பின்னர் பொன்னுசாமிக்கு அவர் செக் கொடுத்தார். ஆனால் வங்கியில் பணம் இல்லாமல் அது திரும்பி வந்து விட்டது.

இது தொடர்பாக நாமக்கல் கோர்ட்டில் பொன்னுசாமியின், மேலாளர் வெங்கடாசலம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, பவர் ஸ்டார் சீனிவாசன் ஆஜராகாததால் 2009ம் ஆண்டு கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்தது. அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 15ம் தேதி பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ஜாமீனில் வெளி வர முடியாதபடி பிடிவாரன்ட் பிறப்பித்து நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் ஜோதி உத்தரவு பிறப்பித்ததுடன், மார்ச் 26ம் தேதிக்குள் அவர் கோர்ட்டில் ஆஜராகா விட்டால் கண்டுபிடிக்க முடியாத குற்றவாளியாக கருதப்படுவார் என உத்தரவிட்டார்.

கோர்ட் உத்தரவை தொடர்ந்து நாமக்கல் போலீசார் சென்னை சென்று சீனிவாசனை தேடிய போது, அவர் அந்தமானுக்கு சென்று விட்டதாக தகவல் கிடைத்தது. அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் போலீசார் கூறுகையில், நடிகர் பவர் ஸ்டார் மீது காவல் நிலையத்தில் மோசடி வழக்கு பதிவு செய்யப்படவில்லை. செக் மோசடி தொடர்பாக அவர் மீது பிரைவேட் கேஸ் கோர்ட்டில் பதிவு செய்துள்ளனர். தற்போது கோர்ட்டில் கடுமையான உத்தரவு பிறப்பித்த பின்னர், போலீசாரிடம் வந்துள்ளனர். பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

இந்த நிலையில் பவர் ஸ்டார் அந்தமானுக்கெல்லாம் போகவில்லை என்பதை மோப்பம் பிடித்தனர் நாமக்கல் போலீஸார். எங்க ஊரு பேரே நாமக்கல், எங்களுக்கே நாமமா என்று டென்ஷனாகிப் போன அவர்கள் செம குரூரமாகயோசித்து ஒரு ஐடியாவைக் களத்தில் இறக்கினர்.

பவர் ஸ்டாரை புதுப் படத்துக்கு புக் செய்யும் இயக்குநர் போல நடித்து பவரை செல்லில் பிடித்தனர். முதலில் சில எண்களுக்குத் தொடர்பு கொண்டபோது பவர் கிடைக்கவில்லை. இதையடுத்து நடிகர்களை ஏற்பாடு செய்யும் ஏஜென்டு சங்கத்தைத் தொடர்பு கொண்டு பெர்சனல் எண்ணைப் பிடித்தனர். அதில் தொடர்புகொண்டபோது ஹலோ என்று தனது அழகான குரலில் பேசினார் பவர்.

இயக்குநர் போல பேசி முதலில்பேசுவது பவர்தான் என்பதை உறுதி செய்த போலீஸார், கால்ஷீட் பற்றியெல்லாம் பேசிநடிப்பில் அசத்தினர். கட்டக் கடைசியாக நாங்கதான் நாமக்கல் போலீஸ் என்று கூற டென்ஷனாகிப் போனார் பவர்.

பின்னர் சுதாரித்தபடி நான் ஷூட்டிங்குக்காக அந்தமான் வந்துட்டேனே என்று சிரித்தபடி கூறினாராம்.அதற்கு போலீஸார் நீங்க எந்த மானுக்குப்போனாலும் விரட்டி வருவோம்ல என்று பதில் சிரிப்பைப் போட, இறங்கி வந்தாராம் பவர்.

விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும், வக்கீல்களை அனுப்புவதாகவும் கூறினாராம் பவர். இதையடுத்து இன்று அல்லது நாளை பவர் நாமக்கல் போலீஸில் சரணடையலாம் எ்ன்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X