மிஷ்கினின் பிசாசு 2 படத்தில் இணைந்த மற்றொரு நடிகை… வெளியானது புதிய தகவல் !
சென்னை : வித்தியாசமான பல திரைப்படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான மிஷ்கின் பிசாசு2 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் ஆண்ட்ரியா பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது இப்படத்தில், நவம்பர் ஸ்டோரிஸ் வெப் தொடரில் நடித்த நமீதா கிருஷ்ணமூர்த்தி இணைந்துள்ளார்.

வரவேற்பை பெற்றது
வழக்கமாக பேய் திரைப்படம் என்றால் அந்த திரைப்படத்தில் பேய் அனைவரையும் கொல்லும், பயமுறுத்தும். ஆனால் பிசாசு படத்தில், நல்லது செய்யும் பேய் என ஒரு விசித்திரமான கதையை நமக்கு கொடுத்து இருப்பார் மிஷ்கின். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆண்ட்ரியா
பிசாசு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் மிஷ்கின். இத்திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி இப்படத்தில் கௌரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

எதிர்பார்ப்பு
ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். மேலும்,இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மனதில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தின் படபிடிப்புக்காக பொள்ளாச்சியில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது.

நமீதா கிருஷ்ணமூர்த்தி
இணையத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்ற நவம்பர் ஸ்டோரிஸ் என்ற வெப் தொடரில், தமன்னாவின் தங்கையாக நடித்த நமீதா கிருஷ்ணமூர்த்தி பிசாசு 2 திரைப்படத்தில் இணைந்துள்ளார். கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











