கணவரை கட்டிப்பிடிச்சு.. காக்க காக்க பாட்டுக்கு ஆட்டம் போட்ட நமிதா.. கருப்பு டிரெஸ்ஸில் கலக்கல்!
சென்னை: நடிகை நமிதா சமீபத்தில் பிரத்யேகமாக அளித்த பேட்டியில் தனக்கும் கணவருக்கும் இடையே விவாகரத்து என்றெல்லாம் வதந்தி கிளம்பியது. அதை பார்த்து இருவரும் சிரித்துக் கொண்டிருந்தோம். ஏன் இப்படி எல்லாம் வதந்தியை கிளப்புறாங்கனு தெரியல என பேசியிருந்தார். இந்நிலையில், தற்போது தனது கணவரை கட்டிப் பிடித்து ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை நடிகை நமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சொந்தம் எனும் தெலுங்கு படத்தில் 2002 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமான நமிதா தமிழில் 2004-ஆம் ஆண்டு விஜயகாந்த், பிரபுதேவா, பாண்டியராஜன் மற்றும் வடிவேலு நடித்த எங்கள் அண்ணா திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஹாய் மச்சான் என ரசிகர்களை அன்போடு அழைத்து ஏங்க வைத்த நடிகை நமிதா கவர்ச்சி கன்னியாக பல ஆண்டுகள் வலம்வந்த நிலையில் தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
ஆடாத ஆட்டமில்லை: 20 வயது முதல் 35 வயது வரை நடிகை நமிதா ஆடாத ஆட்டமே இல்லை. "அர்ஜுனா அர்ஜுனா", "இடுப்பாட்டும் இளவம்பஞ்சு காடு", "சட்டர்டே நைட் பார்ட்டிக்கு போகலாம் வறியா" என ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனமாடியுள்ளார். விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், விஜய், அஜித், பிரசாந்த் என பல நடிகர்களுடன் நமிதா நடித்துள்ளார்.
40 வயதில் ட்வின்ஸ்: குஜராத்தின் சூரத்தில் பிறந்த நமிதா பாஜக கட்சியில் தற்போது உறுப்பினராக உள்ளார். கடந்த 2017ம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். கடந்த 2022ம் ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார் நமிதா. இன்னமும் அதே அழகுடன் அவர் வலம் வருவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஏமாத்திட்டாங்க: நமிதாவை பலர் சினிமாவில் ஏமாற்றியிருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார். தன்னை சிலர் கடத்தியதாகவும் பகீர் தகவலை வெளியிட்டு இருந்தார். தனுஷ் படம் என சொல்லி விட்டு கடைசியாக தயாரிப்பாளரின் உறவினரை ஹீரோவாக நடிக்க வைத்து விட்டார்கள் என்றும் புலம்பித் தள்ளினார். விஜய் மற்றும் அஜித்துடன் நடித்தது குறித்தும் அவர்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த அனுபவங்கள் குறித்தும் அவர் பேசியிருந்தார்.
கணவருடன் டான்ஸ்: இந்நிலையில், தற்போது நமிதா மற்றும் அவரது கணவர் வீரேந்திர சவுத்ரி இருவரும் கருப்பு நிற உடையை அணிந்து கொண்டு காக்க காக்க படத்தில் வரும் "ஒன்றா ரெண்டா" பாடலுக்கு அவரை கட்டிப் பிடித்து நடனமாடும் வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சீக்கிரமே மீண்டும் சினிமாவில் நடிக்க ஏற்பாடுகளை செய்து வருகிறார் நமிதா எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











