»   »  உதயநிதியின் அடுத்த நாயகி 'நமீதா'!!

உதயநிதியின் அடுத்த நாயகி 'நமீதா'!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இருங்க இருங்க... டென்ஷன் ஆக வேணாம். இது வேற நமீதா.

மேட்டருக்குப் போகலாம்...

தேசிய விருது பெற்ற இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நடிக்கிறார். இதை அவரே தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி தெரிவித்துள்ளார்.

Namitha is Udhayanidhi's next pair

மூன்ஷூட் எண்டர்டெயிண்ட்மன்ட் நிறுவனம் சார்பில் இந்தப் படத்தை சந்தோஷ் தயாரிக்கிறார். இப்படம் திலீப் போத்தன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளிவந்த மகேஷின்ட பிரதிகாரம்' என்ற மலையாள படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு வெளிவந்த இப்படம் மலையாள திரையுலகில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழில் உதயநிதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிப்பவர்தான் நமீதா... நமீதா ப்ரமோத். முன்னணி மலையாள நாயகி.

பெதுவாக என் மனசு தங்கம்', இப்படை வெல்லும்' ஆகிய இரு படங்களில் இப்போது நடித்து வருகிறார் உதயநிதி. இந்த இரு படங்களை முடித்தபிறகு ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

English summary
Sources say that Malayalam actress Namitha Promodh will be Udhayanidhi's next pair in Priyadharshan movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil