நகைக்கடை திறப்பு... கணவரை விட்டுட்டு தனியாக வந்த நமீதா!
Recommended Video

சென்னை : கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி தமிழில் பல படங்களில் நடித்த குஜராத்தைச் சேர்ந்த நடிகை நமீதாவுக்கு கடந்த நவம்பர் 24-ம் தேதி வீரேந்திர சௌத்ரி என்பவருடன் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது.
திருப்பதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் 22-ம் தேதி மாலை வரவேற்பும், நவம்பர் 24-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை இஸ்கான் கோவிலில் திருமணமும் நடைபெற்றது. இந்த விழாவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் உள்ளிட்ட நமீதாவுக்கு நெருக்கமான நண்பர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், திருமணத்திற்குப் பிறகு நமீதா பொது நிகழ்ச்சி ஒன்றில் தனியாகக் கலந்துகொண்டுள்ளார். திருவள்ளூரில் அமையப்பெற்றிருக்கும் சாந்தி ஜுவல்லரியின் திறப்புவிழாவில் கலந்துகொண்டு கடையைத் திறந்து வைத்திருக்கிறார் நமீதா.
நகைக்கடையைத் திறந்துவைத்த நமீதா அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் காதணி, நெக்லஸ் உள்ளிட்ட நகைகளை எடுத்துப் பார்த்து ரசித்தார். அங்கிருக்கும் மணப்பெண் நகைகள் பிடித்திருப்பதாகத் தெரிவித்தார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த நமீதா, "உங்கள் வாழ்த்துகளும் ஆசிர்வாதங்களும் எனக்கு இருக்கு.. நான் கண்டிப்பா நடிப்பேன். கணவர் நல்ல புரிந்துகொள்ளலோடு இருக்கிறார். அதனால், எனக்கு எவ்ளோ வருசம் நடிக்க முடியுமோ அவ்ளோ நாள் சினிமாவில் நடிப்பேன்" எனக் கூறியிருக்கிறார்.
செய்தியாளர்கள் கேட்ட அரசியல் பற்றிய கேள்விகளையும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பீர்களா எனும் கேள்வியையும் தவிர்த்தார் நமீதா.


Click it and Unblock the Notifications











