பாலினத்தை கடந்தவர்.. பிக் பாஸ் சீசன் 5ல் 5வதாக வந்த நமிதா மாரிமுத்து யார்?
சென்னை: பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல் முறையாக திருநங்கை போட்டியாளரான நமிதா மாரிமுத்து 5வது போட்டியாளராக கலந்து கொண்டார்.
Recommended Video
சர்வதேச அளவில் மிஸ் வோர்ல்ட் அழகிப் போட்டியில் கலந்து கொண்டு கலக்கியவர் நமிதா மாரிமுத்து.
சிறுவயதில் இருந்து தான் கடந்து வந்த கஷ்டங்கள் குறித்து தனது ஏவியில் நமிதா மாரிமுத்து கூறியது நிச்சயம் ரசிகர்களை உருக வைத்திருக்கும்.

பிக் பாஸ் தமிழ் வரலாற்றில்
சென்னையை சேர்ந்த பிரபல திருநங்கை மாடல் அழகி நமிதா மாரிமுத்து பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். முதன்முறையாக திருநங்கை போட்டியாளர் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளது திருநங்கை சமூதாயத்திற்கே பெரிய வரவேற்பை சமூகத்தில் ஏற்படும் என நம்பி அவர் உள்ளே நுழைந்துள்ளதாக கூறியுள்ளார்.

நமிதா மாரிமுத்து
கடந்த சீசனில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை போட்டியாளரை இறக்கி மிகப்பெரிய வெற்றியை கண்ட நிலையில், இந்த முறை பிக் பாஸ் தமிழில் மாடல் அழகி நமிதா மாரிமுத்துவை களமிறக்க எண்ட்மோல் ஷைன் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. கடந்த சீசன் போல தெரிந்த முகங்கள் இல்லாமல் இந்த சீசனில் பல புதிய முகங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

உலக அழகிப் போட்டி
மாடல் துறையில் ஆர்வம் ஏற்பட்ட சென்னையை சேர்ந்த நமிதா மாரிமுத்து 2014ல் நடைபெற்ற திருநங்கைகளுக்கான மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்டு டைட்டில் வின் பண்ணியுள்ளார். 2015ல் மிஸ் கூவாகம், 2018ல் மிஸ் இந்தியா என கலக்கிய இவர், சமீபத்தில் சர்வதேச அளவில் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்டார்.

செம ஹைட்
மற்ற போட்டியாளர்களை விட செம உயரமாக (6.1) இருக்கும் நமிதா மாரிமுத்து நீல நிற கவர்ச்சி உடையில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். அவரை மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அண்ணாந்து பார்த்தே கழுத்து வலிக்கும் என்பது மட்டும் கன்ஃபார்ம்.

நாடோடிகள் 2
சசிகுமார், அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான நாடோடிகள் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிலும் அறிமுகமானவர் திருநங்கை நமிதா மாரிமுத்து. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மேலும், பல படங்களில் இவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக சேவகி
கொரோனா காலத்தில் உணவு இன்றி தவித்த பல ஏழை மக்களுக்கு முடிந்த அளவில் உணவுகள் வழங்கி சேவை செய்துள்ளார் நமிதா மாரிமுத்து. இந்த போட்டியில் ரொம்பவே டஃப்பான போட்டியாளராக இவர் இருப்பார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என நெட்டிசன்கள் கணித்து இவரது வருகையை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











