யாராச்சும் ஒரு அம்மா, அப்பா மனசையாவது இது நிச்சயம் மாத்தும்.. நமிதாக்கு பெருகிய ரசிகர்கள் ஆதரவு!
சென்னை: நமிதா மாரிமுத்து தன் வாழ்வில் நடந்த துயரங்களை அடுக்க அடுக்க ஒட்டுமொத்த திருநங்கைகளும் இதே போலத்தானே கஷ்டப்பட்டு இருப்பாங்க என பிக் பாஸ் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் உணர்த்து உருகிப் போயுள்ளனர்.
Recommended Video
நமிதா மாரிமுத்து பேச பேச அழத் தொடங்கிய பிக் பாஸ் ரசிகர்கள், அப்படியே சமூக வலைதளங்களில் #NamithaMarimuthu ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து தங்களின் உணர்வுகளை கொட்டி வருகின்றனர்.
மேலும், நமிதாவின் நீண்ட நெடிய வலி நிறைந்த கதையை எங்கேயும் கட் பண்ணாமல் ஒளிபரப்பிய விஜய் டிவிக்கும் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

திருநங்கைகளின் பிரதிநிதி
ஒவ்வொரு மூன்றாம் பாலினத்தவரும் சமூகத்தில் இப்படிப்பட்ட பல சிக்கல்களை சொந்த பெற்றோர்களிடமே அனுபவித்து அல்லல்பட்டு ஏகப்பட்ட அடி, உதைகளை வாங்கி வாழ்வதே பெரிய விஷயம் என்கிற நிலையில், அதிலும் சாதனை படைத்து பிக் பாஸ் வீட்டில் அனைத்து திருநங்கைகளின் பிரதிநிதியாகவே மாறியுள்ள நமிதா மாரிமுத்துவின் இந்த நீண்ட நெடிய வலி நிறைந்த பேச்சை கேட்டு பலரும் ஒரு சொட்டு கண்ணீராவது சிந்தியிருப்பார்கள். இந்த சீசனில் விஜய் டிவி செய்த ஒரே நல்ல விஷயம் இவங்களை போட்டியாளராக கொண்டு வந்தது தான் என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

விஜய் டிவிக்கு பாராட்டு
சில போட்டியாளர்கள் ரொம்ப லெந்தா பேசுனா பிக் பாஸ் எடிட்டரே ஜம்ப் கட் கொடுத்து எடிட் பண்ணி விடுவார். ஆனால், நமிதா மாரிமுத்துவின் வலியும் வேதனையும் அடங்கிய கதை சமூகத்தில் நிச்சயம் ஒரு சிறிய மாற்றத்தையாவது மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் என நினைத்து விஜய் டிவி எந்தவொரு கட்டும் பண்ணாமல் ஒளிபரப்பியதற்கு பாராட்டு என ரசிகர்கள் விஜய் டிவியையும் பிக் பாஸ் குழுவையும் பாராட்டி வருகின்றனர்.

ஒரு பெற்றோராவது
நமிதா மாரிமுத்துவின் கண்ணீர் கதை நிச்சயம் இதே போன்ற மாற்றங்களுடன் பிறந்த குழந்தைகளை பெற்றெடுத்த ஒரு அப்பா அம்மா மனசையாவது இந்நேரம் மாத்தியிருந்தாலே அது இந்த சீசனுக்கே கிடைத்த பெரிய வெற்றி தான் என்று சொல்லலாம். இந்த ஷோவில் தெரிந்த நடிகர்களை விட தெரியாத போராளிகளை கொண்டு வந்தது தரமான சம்பவம் என ரசிகர்கள் பிக் பாஸ் சீசன் 5ன் பரம ரசிகர்களாக மாற ஆரம்பித்து விட்டனர்.

யப்பா சாமி
"யப்பா சாமி! உங்களுக்கு நடந்த கொடுமை வேற யாருக்குமே நடக்க கூடாது....நீங்க கஷ்டபட்டதுக்கான எல்லா பயனும் ஆசீர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும். namithamarimuthu" என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களிலும் நமிதாவுக்கு ஹார்ட்டீன்களை போட ஆரம்பித்து விட்டனர்.

நீங்க பெண் தான்
திரு நங்கை என்பதே பெண்ணை குறிக்கும் சொல் தான். ஆனால், நமிதா மாரிமுத்து போன்று பெண்ணாக உடல் மாற்றம் அடைந்த அனைவரும் நிச்சயம் பெண் தான். நமிதா நீங்க பெண் தான் உங்களை நினைத்து பெருமை அடைகிறோம் என ஏகப்பட்ட ரசிகர்கள் நமிதாவுக்கு முழு ஆதரவை அளித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











