கிருஷ்ணர் கொடுத்த இரண்டு அற்புதங்கள்..குழந்தைகளுக்கு பெயர் வைத்த நமீதா..என்னனு நீங்களே பாருங்க!
சென்னை : நடிகை நமீதா தனது இரட்டை குழந்தைகளுக்கு அழகான பெயர் வைத்துள்ளார்.
2004-ம் ஆண்டு வெளியான நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நமீதா, முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துவிட்டார்.
விஜய், அஜித்,சரத்குமார், பார்த்திபன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்த்து நடித்துள்ளார்.

நடிகை நமீதா
ஹாய் மச்சான்ஸ் என்று கொஞ்சி கொஞ்சி இவர் பேசும் தமிழை கேட்கவே ஒரு கூட்டம் நமீதா பின்னாள் சுற்றிக்கொண்டு இருந்தது. அழகிய தமிழ் மகன், பில்லா, நான் அவன் இல்லை படங்களில் சிக்குனு இருந்த நமீதா, ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போனார். மன அழுத்தத்தால் தான் தனது உடல் அவ்வாறு மாறியதாக, நமீதா பல பேட்டியில் கூறியிருந்தார்

பிக் பாஸ் நிகழ்ச்சியில்
பட வாய்ப்புகள் குறைந்ததால் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமே தலைக்காட்டி வந்த நமீதா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். ஆனால், அதிலும் அவரால் தாக்கு பிடிக்க முடியாமல் 28 நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

காதல் திருமணம்
இதையடுத்து, 2017 ம் ஆண்டு நமீதா-வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை கர்ப்பமாக போட்டோஷூட் மூலம் தனது ரசிகர்களுக்கு அறிவித்தார். இதையடுத்து ,கடந்த ஆகஸ்ட் மாதம் நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது.

இரண்டு அழகான அற்புதங்கள்
இந்நிலையில், தனது குழந்தைகளுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு, எங்க குழந்தைக்கு, எனது சொந்த ஊரான சூரத்தில் பெயர் சூட்டுவிழா நடைபெற்றது. என் மகன்களுக்கு கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என பெயர் வைத்துள்ளேன். என் கிருஷ்ணர் எனக்கு பரிசளித்த இரண்டு அழகான அற்புதங்கள், என் விலைமதிப்பற்ற பரிசு. அதனால், கிருஷ்ணாவின் பெயரை என் குழந்தைகளுக்கு பெயர் வைத்திருக்கிறேன். உங்கள் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.இந்த பார்த்த நமீதாவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











