Don't Miss!
- News ஆச்சரியம்.. உடனே வெளியே போய் பாருங்க.. 12.17 முதல் 12.23 வரை நிழல் தரையில் விழாது
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Automobiles இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நமீதா புடிச்ச மாப்பிள்ளை யாரு? காதலர்களானது எப்படி?
Recommended Video
நடிகை நமீதா இன்று தன் திருமண அறிவிப்பை வெளியிட்டுவிட்டார். வீரா என்பவரைத்தான் திருமணம் செய்யப் போவதாகவும், இது காதல் / ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
நமீதாவுக்கு மாப்பிள்ளையாகியிருக்கும் வீரா யார்?
வீரா
அவர் ஒரு சினிமா தயாரிப்பாளர். வளரும் நடிகர். மியா என்ற படத்தில் நமீதாவுடன் நடித்தவர்தான் இந்த வீரா. சசிதர் பாபு என்ற நண்பர் மூலம் நமீதாவுக்கு அறிமுகமான வீரா, பின்னர் நெருக்கமான நண்பராக, காதலராக மாறிவிட்டார்.
கேண்டில் லைட் டின்னர்
ஒரு கேண்டில் லைட் டின்னர் வைத்து நமீதாவிடம் தன் காதலை வீரா சொல்ல, அடுத்த நொடியே ஓகே சொல்லிவிட்டாராம் நமீதா.
அதன் பிறகு மூன்று மாதங்கள் இருவரும் நெருங்கிப் பழகி, பல இடங்களுக்கு ஜோடியாகச் சென்று ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பிறகு இந்தக் கல்யாண அறிவிப்பை வெளியிட்டதாக நமீதா கூறியுள்ளார்.
நமீதா ஸ்டேட்மென்ட்
"வீரா எனக்குக் கிடைத்தது என் அதிர்ஷ்டம். இருவரும் கடந்த மூன்று மாதங்களாக பல மலைப் பகுதிகளில் நடந்து திரிந்தோம். அப்போது இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம். கடந்த செப்டம்பர் 6-ம் தேதி ஒரு பீச்சில் கேண்டில் லைட் டின்னருக்கு ஏற்பாடு செய்திருந்தார் வீரா. அங்கு வைத்து என்னிடம் தன் காதலை அவர் தெரிவித்த விதம் அருமையாக இருந்தது. நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. ப்ளாட்டாகிட்டேன். உடனே சம்மதம் தெரிவித்தேன். இருவருக்குமே ஒரே மாதிரி விருப்பங்கள், ஆசைகள், ஆன்மீக நாட்டங்கள். உங்கள் ஆசியுடன் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம்," என்று கூறியுள்ளார்.
திருமணத்துக்குப் பின்
நமீதாவுக்கு தமிழில் இரு படங்கள் மட்டுமே உள்ளன. அவற்றிலும் நடித்து முடித்துவிட்டார். நவம்பர் 24ம் தேதி திருப்பதியில் திருமணம். திருமணத்துக்குப் பிறகு நடிப்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை.