எங்கிருந்தாலும் வாழ்க: மனதை இரும்பாக்கிக்கிட்ட மச்சான்ஸ், ட்விட்டரில் டிரெண்டாகும் #Namitha
Recommended Video

சென்னை: நமீதாவை மச்சான்ஸ் வாழ்த்தி வரும் நிலையில் #Namitha என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.
மச்சான்ஸ் என்ற ஒரேயொரு வார்த்தையை கூறி தமிழகத்து ரசிகர்களை அன்பால் கட்டிப்போட்டு வைத்தவர் நமீதா. அதே நமீதா தான் இன்று வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து மச்சான்ஸ் தலையில் இடியை இறக்கிவிட்டார்.
இருப்பினும் மச்சான்ஸ் எல்லாம் மனதை இரும்பாக்கிக் கொண்டு நமீதாவை வாழ்த்துகிறார்கள்.

ட்விட்டர்
திருமதியாகியுள்ள நமீதாவுக்கு திரையுலகினரும், மச்சான்ஸ்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் #Namitha என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

காயத்ரி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் காயத்ரி ரகுராம், ஆர்த்தி, சக்தி ஆகியோர் திருப்பதி சென்று மணமக்களை நேரில் வாழ்த்தியுள்ளனர்.
ரசிகர்
இனிய திருமண நல்வாழ்த்துகள்... #Namitha & Veer ... என ரசிகர் ஒருவர் வாழ்த்தியுள்ளார்.
மச்சான்
நமீதாவுக்கு ரசிகர் ஒருவர் திருமண வாழ்த்து தெரிவித்து ட்வீட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications