»   »  கடலில் போன நமீதாவின் வைர மோதிரம் மகாபலிபுரம் கடல் பகுதியில் படப்பிடிப்பின் போது நடிகை நமீதா அணிந்திருந்த ரூ. ஒன்றரை லட்சம் மதிப்புள்ள வைரமோதிரம் கடலில் விழுந்து காணாமல் போனது. காதலர் அளித்த மோதிரம் காணாமல் போனதால் நமீதா பெரும் சோகத்தில்மூழ்கினார். சத்யராஜ், சிபிராஜ், நமீதா நடிக்கும் கோவை பிரதர்ஸ் படத்தின் படப்பிடிப்பு மகாபலிபுரத்தில் சில நாட்களாக நடந்து வந்தது.மகாபலிபுரம் கடற்கரையில் சிபியும், நமீதாவும் பாடும் பாடல் காட்சி ஒன்றை படமாக்கினார்கள். காலையில் ஆரம்பித்த படப்பிடிப்பு மாலை வரை நீடித்தது. சிபியும், நமீதாவும் கடல் அலைகளுக்குப் போட்டியாக கட்டிப்புடிஆட்டத்தில் ஈடுபட்டனர். படப்பிடிப்பு முடிந்து அனைவரும் கிளம்பத் தயாரான போது நமீதா பெரும் குரல் எடுத்து அலறஆரம்பித்தார். இதனால் படப்பிடிப்புக் குழுவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இயக்குநர் ஷக்தி சிதம்பரம் விரைந்து சென்றுஎன்னம்மா ஆச்சு என்று விசாரித்தார். அவரிடம், தனது கை விரலில் அணிந்திருந்த வைர மோதிரத்தைக் காணவில்லை என்றுநமீதா அழுதவாறு கூறினார்.சிபிராஜுடன் கடலில் கட்டிப்புரண்டு உருண்டு நடித்த போது கடலில் விழுந்திருக்கலாம் என்று அவர் கூறினார். இதையடுத்துநமீதாவும், சிபியும் உருண்டு புரண்ட மணல் பகுதியில் படப்பிடிப்புக் குழுவினர் மோதிரம் கிடக்கிறதா என்று தேடிப் பார்த்தனர்.ஆனால் மோதிரம் கிடைக்கவில்லை. நமீதாவின் அந்த வைர மோதிரம் ரூ. ஒன்றரை லட்சம் மதிப்புடையதாம். அவரது காதலர் அன்புப் பரிசாக இதை நமீதாவுக்குக்கொடுத்துள்ளார். காதலர் கொடுத்த மோதிரத்தை சினிமாக் காதலின் போது தொலைத்து விட்டதால் ரொம்பவும் சோகமாகிவிட்டார் நமீதா. அவரை சமாதானப்படுத்தி இயக்குநர் ஷக்தி சிதம்பரம் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

கடலில் போன நமீதாவின் வைர மோதிரம் மகாபலிபுரம் கடல் பகுதியில் படப்பிடிப்பின் போது நடிகை நமீதா அணிந்திருந்த ரூ. ஒன்றரை லட்சம் மதிப்புள்ள வைரமோதிரம் கடலில் விழுந்து காணாமல் போனது. காதலர் அளித்த மோதிரம் காணாமல் போனதால் நமீதா பெரும் சோகத்தில்மூழ்கினார். சத்யராஜ், சிபிராஜ், நமீதா நடிக்கும் கோவை பிரதர்ஸ் படத்தின் படப்பிடிப்பு மகாபலிபுரத்தில் சில நாட்களாக நடந்து வந்தது.மகாபலிபுரம் கடற்கரையில் சிபியும், நமீதாவும் பாடும் பாடல் காட்சி ஒன்றை படமாக்கினார்கள். காலையில் ஆரம்பித்த படப்பிடிப்பு மாலை வரை நீடித்தது. சிபியும், நமீதாவும் கடல் அலைகளுக்குப் போட்டியாக கட்டிப்புடிஆட்டத்தில் ஈடுபட்டனர். படப்பிடிப்பு முடிந்து அனைவரும் கிளம்பத் தயாரான போது நமீதா பெரும் குரல் எடுத்து அலறஆரம்பித்தார். இதனால் படப்பிடிப்புக் குழுவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இயக்குநர் ஷக்தி சிதம்பரம் விரைந்து சென்றுஎன்னம்மா ஆச்சு என்று விசாரித்தார். அவரிடம், தனது கை விரலில் அணிந்திருந்த வைர மோதிரத்தைக் காணவில்லை என்றுநமீதா அழுதவாறு கூறினார்.சிபிராஜுடன் கடலில் கட்டிப்புரண்டு உருண்டு நடித்த போது கடலில் விழுந்திருக்கலாம் என்று அவர் கூறினார். இதையடுத்துநமீதாவும், சிபியும் உருண்டு புரண்ட மணல் பகுதியில் படப்பிடிப்புக் குழுவினர் மோதிரம் கிடக்கிறதா என்று தேடிப் பார்த்தனர்.ஆனால் மோதிரம் கிடைக்கவில்லை. நமீதாவின் அந்த வைர மோதிரம் ரூ. ஒன்றரை லட்சம் மதிப்புடையதாம். அவரது காதலர் அன்புப் பரிசாக இதை நமீதாவுக்குக்கொடுத்துள்ளார். காதலர் கொடுத்த மோதிரத்தை சினிமாக் காதலின் போது தொலைத்து விட்டதால் ரொம்பவும் சோகமாகிவிட்டார் நமீதா. அவரை சமாதானப்படுத்தி இயக்குநர் ஷக்தி சிதம்பரம் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

Subscribe to Oneindia Tamil

மகாபலிபுரம் கடல் பகுதியில் படப்பிடிப்பின் போது நடிகை நமீதா அணிந்திருந்த ரூ. ஒன்றரை லட்சம் மதிப்புள்ள வைரமோதிரம் கடலில் விழுந்து காணாமல் போனது. காதலர் அளித்த மோதிரம் காணாமல் போனதால் நமீதா பெரும் சோகத்தில்மூழ்கினார்.

சத்யராஜ், சிபிராஜ், நமீதா நடிக்கும் கோவை பிரதர்ஸ் படத்தின் படப்பிடிப்பு மகாபலிபுரத்தில் சில நாட்களாக நடந்து வந்தது.மகாபலிபுரம் கடற்கரையில் சிபியும், நமீதாவும் பாடும் பாடல் காட்சி ஒன்றை படமாக்கினார்கள்.

காலையில் ஆரம்பித்த படப்பிடிப்பு மாலை வரை நீடித்தது. சிபியும், நமீதாவும் கடல் அலைகளுக்குப் போட்டியாக கட்டிப்புடிஆட்டத்தில் ஈடுபட்டனர். படப்பிடிப்பு முடிந்து அனைவரும் கிளம்பத் தயாரான போது நமீதா பெரும் குரல் எடுத்து அலறஆரம்பித்தார்.


இதனால் படப்பிடிப்புக் குழுவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இயக்குநர் ஷக்தி சிதம்பரம் விரைந்து சென்றுஎன்னம்மா ஆச்சு என்று விசாரித்தார். அவரிடம், தனது கை விரலில் அணிந்திருந்த வைர மோதிரத்தைக் காணவில்லை என்றுநமீதா அழுதவாறு கூறினார்.

சிபிராஜுடன் கடலில் கட்டிப்புரண்டு உருண்டு நடித்த போது கடலில் விழுந்திருக்கலாம் என்று அவர் கூறினார். இதையடுத்துநமீதாவும், சிபியும் உருண்டு புரண்ட மணல் பகுதியில் படப்பிடிப்புக் குழுவினர் மோதிரம் கிடக்கிறதா என்று தேடிப் பார்த்தனர்.ஆனால் மோதிரம் கிடைக்கவில்லை.

நமீதாவின் அந்த வைர மோதிரம் ரூ. ஒன்றரை லட்சம் மதிப்புடையதாம். அவரது காதலர் அன்புப் பரிசாக இதை நமீதாவுக்குக்கொடுத்துள்ளார். காதலர் கொடுத்த மோதிரத்தை சினிமாக் காதலின் போது தொலைத்து விட்டதால் ரொம்பவும் சோகமாகிவிட்டார் நமீதா. அவரை சமாதானப்படுத்தி இயக்குநர் ஷக்தி சிதம்பரம் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil