மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
சென்னை: நடிகர் மகேந்திரன், நடிகை மியா ஸ்ரீ நடிப்பில் வெளிவரவுள்ள படம் 'நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு'.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் நல்.செந்தில்குமார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.
இந்த படத்தின் ட்ரைலரை படக்குழு இன்று வெளியிட திட்டமிட்டுள்ளது. அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.

குழந்தை நட்சத்திரம்
நாட்டாமை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 100க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் மாஸ்டர் மகேந்திரன். இந்திய சினிமாவில் அதிக படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் என்ற சாதனையையும் படைத்துள்ளார் மகேந்திரன்.

பவானி கதாபாத்திரம்
மாஸ்டர் படத்தில் சிறு வயது விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மகேந்திரன். அதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்க இது தான் சரியான நேரம் என திட்டத்துடன் 'நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு' ட்ரைலரை வெளியிடுகிறது படக்குழு.

அரசியல் குழப்பங்கள்
பல அரசியல் குழப்பங்கள், பொருளாதார சிக்கல்கள், போராட்டங்கள் என தொடர்ந்து தமிழ்நாடு சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்நேரத்தில் இதனை பிரதிபலிக்கும் வகையில்தான் இந்த படம் தயாராகியுள்ளது என படத்தின் இயக்குனர் முன்னர் கூறியிருந்தார்.

கார்த்தி, வெங்கட் பிரபு
இதையடுத்து 'நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு' படத்தின் ட்ரைலரை இன்று மாலை 5:00 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் ட்ரைலரை நடிகர் கார்த்தி, இயக்குனர் வெங்கட் பிரபு ஆகியோர் வெளியிடவுள்ளனர் எனவும் சற்றுமுன் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











