பேரு பெத்த பேரு.. ஆனா முதல் நாள் வசூல் சரியில்லையே.. கவலையில் நம்ம வீட்டு பிள்ளை படக்குழு!
சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் முதல் நாளில் சென்னையில் மட்டும் ரூ.58 லட்சம் வசூலித்துள்ளது.
Recommended Video
சென்னை: சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் முதல் நாள் வசூலில் கடும் சரிவை சந்தித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் எப்போதும் நல்ல வசூலை கொடுத்து வந்தன.
வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல் என அடுத்தடுத்து வெளியான மூன்று படங்களும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. இதனால் ஒரு ஹிட் படத்தை கொடுத்தே ஆக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் சிவகார்த்திகேயன்.

கட்டாயத்தில் நம்ம வீட்டு பிள்ளை
இந்த சூழலில் தான் சன் பிக்சர்ஸ் பேனரில் பாண்டியராஜ் இயக்கத்தில் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் கமிட் ஆனார் சிவா. பாண்டிராஜின் கடைக்குட்டி சிங்கம் சூப்பர் டூப்பர் ஹிட் என்பதால், அதே ஜானரில் குடும்பப் படமாக உருவானது நம்ம வீட்டு பிள்ளை. இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

வசூல் நிலவரம்
வேலைக்காரன் படம் முதல் நாளில் ரூ.90 லட்சம் வசூல் செய்தது. சீமராஜா முதல் நாளில் ஒரு கோடிக்கு மேல் வசூலித்தது. மிஸ்டர் லோக்கல் திரைப்படம் படுதோல்வி என்றாலும், முதல் நாளில் ரூ.70 லட்சம் வசூல் செய்தது.

வசூல் குறைந்தது
ஆனால் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் அதைவிட குறைவாக தான் வசூலித்துள்ளது. முதல் நாள் நிலவரப்படி நம்ம வீட்டு பிள்ளை சென்னையில் மட்டும் ரூ.58 லட்சம் வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. சன் பிக்சர்ஸ் போன்றதொரு பெரிய தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்து ரிலீஸ் செய்தும், அவர்களால் முதல் நாளில் பெரிய தொகையை எடுக்க முடியவில்லை.

அடுத்தடுத்த வாரங்களில் பிக்கப்பாகும்
இருப்பினும் அடுத்து வரும் நாட்களில் இப்படத்தில் வசூல் அதிகரிக்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் நம்புகின்றனர். சூர்யாவின் காப்பான் படமும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நம்ம வீட்டு பிள்ளை வசூல் பாதிப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள் அவர்கள்.

படக்குழு கவலை
இருப்பினும் குடும்பப் படம் என்பதால் தமிழ்நாடு முழுவதிலும் இந்த படம் வெற்றி அடையும் என திரையரங்கு உரிமையாளர்கள் உறுதியாக இருக்கின்றனர். எனவே இனி வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனபோதும், விமர்சன ரீதியாக நல்லபெயர் கிடைத்தும் வசூலில் அது எதிரொலிக்கவில்லையே என்ற கவலையில் படக்குழுவினர் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











