இது நம்ம வீட்டு பிள்ளை.. கொண்டாடும் ரசிகர்கள்.. செம ஓப்பனிங்.. சிவகார்த்திகேயனுக்கு இன்னொரு ஹிட்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை படம் நல்ல ரிவ்யூக்களை பெற்று வருவதால் படத்தின் தயாரிப்பாளர் தரப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
Recommended Video
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை படம் நல்ல ரிவ்யூக்களை பெற்று வருவதால் படத்தின் தயாரிப்பாளர் தரப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் சத்தமே இல்லாமல் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக மாறிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். படத்தில் கதை இருக்கிறதோ, காமெடி இருக்கிறதோ, நல்ல பாடல் இருக்கிறதோ இல்லையோ, எப்படியாவது படத்தை ஹிட் ஆக்கிவிடுகிறார்.
இவர் நடித்து பிளோ ஆவரேஜ் படம் என்று எதுவும் இல்லை. வரிசையாக எல்லா படங்களும் ஹிட் அடித்துள்ளது அல்லது பிரேக் ஈவன் செய்துள்ளது.

இப்போது
இந்த நிலையில்தான் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குனர் பாண்டியராஜ் இயக்கி உள்ளார். அதேபோல் படத்தில் அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரகனி, யோகி பாபு, சூரி ஆகியோர் நடித்துள்ளனர்.

செம
இந்த படத்திற்கு டி இமான் இசை அமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் சார்பாக கலாநிதி மாறன் படத்தை தயாரித்துள்ளார். படத்திற்கு காலையில் இருந்து மிகவும் நன்றாக விமர்சனம் வெளியாகி வருகிறது.

எப்படி உள்ளது
நம்ம வீட்டு பிள்ளை படத்தின் தொடக்கம் நன்றாக இருக்கிறது. ஆனால் போக போக குடும்ப டிராமா போல கொஞ்சம் இழுக்கிறது. ஆனால் இரண்டாவது பாதி நன்றாக செல்கிறது. கிளைமேக்ஸ் மிக சிறப்பாக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

என்ன காமெடி
சூரி காமெடி இதில் வொர்க் அவுட் ஆகவில்லை. ஆனால் யோகி பாபு ஒன் லைன் கவனம் ஈர்க்கிறது. பாடல்கள் ஓகே ரகம். முக்கியமாக கிளைமேக்சில் சி.கா பேசும் வசனம் பெரிய கைதட்டலை பெற்றுள்ளது.

மொத்தத்தில் ஹிட்
மொத்தத்தில் படத்தில் புதிய காட்சிகள் எதுவும் பெரிதாக கிடையாது. ஆனால் கண்டிப்பாக படம் ஹிட் அடித்துவிடும். பட்ஜெட்டை விட கண்டிப்பாக பெரிய தொகையை லாபமாக பார்க்க போகிறது. படம் ரீமேக் செய்யப்படவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

ஹாப்பி அண்ணாச்சி
இதனால் தற்போது தயாரிப்பாளர் கலாநிதி மாறனும், சன் பிக்சர்ஸ் தரப்பும் சந்தோசத்தில் இருக்கிறார்களாம். நீண்ட நாட்களுக்கு பின் சன் பிக்சர்ஸ் நேரடியாக தயாரிக்கும் படமாகும் இது. படமும் ஹிட். இந்த படத்தின் வரவேற்பு காரணமாக சிவகார்த்திகேயன் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











