பாவம் சிவா.. நம்ம வீட்டு பிள்ளைக்கு புது சிக்கல்.. சன் பிக்சர்ஸ் பட்டப்பாடெல்லாம் வீணாப் போச்சே!

Recommended Video

POSTER PAKIRI : NAMMA VEETU PILLAI REVIEW | FILMIBEAT TAMIL

சென்னை: சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்துக்கு ரிலீஸ் ஆன முதல் நாளே ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

பாண்டியராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் நேற்று தான் ரிலீசானது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இமானுவேல், சமுத்திரகனி, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நம்ம வீட்டு பிள்ளை படம் குறித்து ரசிகர்கள் பெரும்பாலும் நல்லபடியாக கருத்து தெரிவித்துள்ளனர். கடைக்குட்டி சிங்கம் போலவே இந்த படத்தையும் குடும்ப படமாக எடுத்துள்ளார் பாண்டிராஜ். எனவே வசூல் ரீதியாக நல்ல சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்ராக்கர்ஸ்

தமிழ்ராக்கர்ஸ்

ஆனால் இப்படத்திற்கு புதிய சிக்கலாக தமிழ்ராக்கர்ஸ் வந்துள்ளது. ரிலீஸ் ஆன முதல் நாளே படத்தை அவர்கள் ஆன்லைனில் வெளியிட்டுவிட்டனர். இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

நீதிமன்றம் தடை

நீதிமன்றம் தடை

நம்ம வீட்டு பிள்ளை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், இணையத்தில் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட 6455 இணைய தளங்களில் படத்தை வெளியிட தடைவிதித்தது.

படக்குழு கலக்கம்

படக்குழு கலக்கம்

ஆனால் நீதிமன்ற உத்தரவையும் மீறி தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் நம்ம வீட்டு பிள்ளை படத்தை வெளியிட்டுவிட்டது. இதனால் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும் கலக்கத்தில் இருக்கிறார்கள். ஆன்லைனில் இருந்து படத்தை நீக்குவதற்கான வேலைகளை அவர்கள் செய்து வருகிறார்கள்.

வசூல் பாதிக்குமா?

வசூல் பாதிக்குமா?

நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் முதல் நாளில் சென்னையில் மட்டும் ரூ.58 லட்சம் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இன்றும் நாளையும் இந்த வசூல் பாதிக்கப்பட்டால் படத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். தொடர் தோல்விகளில் இருந்து தன்னை இந்த படம் காப்பாற்றும் என சிவகார்த்திகேயன் நம்பி வந்த நிலையில், இப்படி ஒரு புது தலைவலி ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X