Nana Patekar: "ரசிகர்ன்னு தெரியாம அடிச்சிட்டேன்..” அழாத குறையாக மன்னிப்புக் கேட்ட ரஜினி பட வில்லன்!
மும்பை: இந்தியில் முன்னணி நடிகராக வலம் வருபவம் நானே படேகர்.
சிறந்த நடிகருக்காக மூன்று தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.
காலா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார்.
இந்நிலையில் ரசிகரை தாக்கிய சம்பவம் ஒன்றில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார் நானே படேகர்.

பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட நானே படேகர்
மராத்தி படங்களில் நடித்து பிரபலமான நானே படேகர், பின்னர் பாலிவுட்டில் என்ட்ரியானார். பரிந்தா என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றார். அப்போது முதல் பாலிவுட்டில் முன்னணி நடிகராக மாஸ் காட்டி வருகிறார். ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல் என நானே படேகர் நடிக்காத கேரக்டர்களே கிடையாது.
தமிழில் பாரதிராஜா இயக்கிய பொம்மாலட்டம் படத்தில் நடித்திருந்தார். ஆனால் அவருக்கு கோலிவுட் ரசிகர்களிடம் மிகப் பெரிய அறிமுகம் கொடுத்தது காலா தான். பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். இந்நிலையில் சில தினங்களாக நானே படேகரின் வீடியோ ஒன்று வைரலானது.
அதாவது செல்ஃபி எடுக்க முயன்ற ஒருவரை அவர் அடிக்க, அந்த சம்பவம் பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து இந்த சர்ச்சை குறித்து மனம் திறந்துள்ள நானே படேகர், பகிரங்கமாக வீடியோ வெளியிட்டு மன்னிப்புக் கேட்டுள்ளார். அதில், நான் ஒருவரை அடிப்பதை போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால், ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தபோது நபர் ஒருவர் உள்ளே வந்தார்.
அவர் யாரென தெரியாது; ஆனால், அந்த சீனில் நடிக்க வேண்டிய துணை நடிகர் என நினைத்துவிட்டேன். அதனால், அந்தக் காட்சியில் இருந்தபடி அவரை அடித்தும் விட்டு கிளம்ப சொன்னேன். அதன்பின்னர் தான் அந்த நபர் எங்கள் படக்குழுவைச் சேர்ந்தவர் இல்லை என தெரியவந்தது. உடனே அவரை அழைத்து மன்னிப்புக் கேட்க நினைத்தேன். ஆனால் அவர் அதற்குள்ளாக அங்கிருந்து சென்றுவிட்டார்.
மற்றபடி என்னோடு செல்ஃபி எடுக்க வரும் எந்த ரசிகரையும் நான் எதுவும் செய்தது கிடையாது. இந்த சம்பவமும் நான் வேண்டும் என செய்யவில்லை, தவறுதலாக நடந்துவிட்டது. இது தவறாக புரிந்திருந்தால் தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள். இனி நான் இப்படி செய்ய மாட்டேன் என பகிரங்கமாக கூறியுள்ளார். இதனை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார், அதாவது "அடிக்கறதையும் அடிச்சிட்டு... அது படத்தோட சீன் என்று நினைச்சி அடிச்சிட்டாராம். நல்லா விடறீங்க சார் ரீலு" என ட்வீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











