twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘நண்பன்’ 10 ஆம் ஆண்டு...யதார்த்த நடிப்பில் கலக்கிய விஜய்...கொண்டாடிய ரசிகர்கள்

    |

    வழக்கமான விஜய் படத்தில் உள்ளதுபோல் காதல், சண்டை, ஆடல் பாடல் என்றில்லாமல் நல்ல மெசேஜை இளைஞர்களுக்கு சொன்ன பாசிட்டிவான படம் நண்பன். தழுவல் படமாக இருந்தாலும் இயக்குநர் ஷங்கரின் முத்திரையில் அற்புதமாக வெளியாகி விஜய் ரசிகர்கள் கொண்டாடிய படம் நண்பன். அது வெளியாகி 10 வது ஆண்டு என்பதால் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    பிக்பாசில் தாமரையின் ஒரு வார சம்பளம் இவ்வளவா?... ஆச்சரியத்தில் ரசிகர்கள் பிக்பாசில் தாமரையின் ஒரு வார சம்பளம் இவ்வளவா?... ஆச்சரியத்தில் ரசிகர்கள்

    மெசேஜ் சொன்ன பழைய படங்கள்

    மெசேஜ் சொன்ன பழைய படங்கள்

    பொதுவாக திரைப்படங்களில் மக்களுக்கு ஏதாவது மெசேஜ் சொன்னவர்கள் காலம் கடந்தும் மக்கள் மனதில் வாழ்கிறார்கள். திரையுலகில் மக்களால் வாத்தியார் என அன்போடு அழைக்கப்பட்ட எம்ஜிஆர் படங்களில் அழுத்தமான மெசேஜ் படத்தில் அழகாக இழையோடும். பெண்களை மதிக்கவேண்டும், நல்ல பண்புகள் இருக்கவேண்டும், கல்வி முக்கியம், மற்றவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு என பல மெசேஜ்கள் எம்ஜிஆர் படத்தில் எப்போதும் உண்டு. அதுவே அவர் புகழ் பெற காரணமாக அமைந்தது.

    சீர்த்திருத்த கருத்துகளை சொன்ன கலைவாணர், எம்.ஆர்.ராதா

    சீர்த்திருத்த கருத்துகளை சொன்ன கலைவாணர், எம்.ஆர்.ராதா

    அவர் காலத்திலேயே நகைச்சுவை மூலமும், குணச்சித்திர காட்சிகள் மூலமும் பல்வேறு சீர்த்திருத்த கருத்துகளை சொன்னவர்கள் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா போன்றோர் உண்டு. இதைத்தவிர கதைகள் மூலம் சீர்த்திருத்த கருத்துக்களை சொன்ன இயக்குநர்கள் வரிசையை பட்டியலிட முடியாத அளவுக்கு நீளமானது. இந்திய திரையுலகில் மலையாள, வங்காள படங்களுக்கு இணையாக மொழி ஆளுமை, சமூக அக்கறையுள்ள படங்களை தமிழ் சினிமா வழங்கியுள்ளது.

    ஹீரோவை பூஜித்து பின்பற்றும் ரசிகர்கள்

    ஹீரோவை பூஜித்து பின்பற்றும் ரசிகர்கள்

    அந்த பாரம்பரியம் இடையில் சிதைகிறதோ என்கிற எண்ணத்தை அவ்வப்போது வரும் இளம் இயக்குநர்கள், நடிகர்கள் மாற்றி அமைத்து வருகின்றனர். எதையும் ஸ்டார் நடிகர்கள் சொன்னால் அது இளம் ரசிகர்களிடம் சென்று உடனே சேரும். நன்மையோ, தீமையோ அது கணக்கில்லை. மது, புகைப்பிடிக்கும் காட்சிகளை ஹீரோக்கள் தவிர்க்க வேண்டும் என சமூக அக்கறையுள்ளவர்கள் வலியுறுத்துவது இதனால் தான்.

    நண்பன் படம் நட்பான படம்

    நண்பன் படம் நட்பான படம்

    ஏன் இவ்வளவு முன்னுரை என யோசிக்கலாம், காரணம் இருக்கு நண்பன் படம் விஜய் படத்தில் எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்கவே இந்த முன்னுரை. விஜய் ஒரு மாஸ் ஹீரோ. தமிழகத்தில் அவருக்கு இருக்கும் இளம் ரசிகர் பட்டாளம் வேறு யாருக்கும் இல்லை எனலாம். அப்படிப்பட்ட விஜய் பாசிட்டிவ் எனர்ஜியை தூண்டும் படத்தில் நடித்தார் என்றால் அப்படம் எப்படி பார்க்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் 10 ஆண்டுகள் கடந்தும் அப்படம் பற்றி நினைவு கூறப்படுகிறது.

    அடடா எத்தனை மெசேஜ்கள் படத்தில்

    அடடா எத்தனை மெசேஜ்கள் படத்தில்

    விஜய்யின் வழக்கமான படமாக அல்லாமல் முதிர்ச்சியான இளம் மாணவராக கல்லூரியில் அவரது என்ட்ரி காட்சி அள்ளும். படம் த்ரி இடியட்ஸ் இந்திப்பட தழுவல் என்றாலும் தமிழ் படமாக அழகாக இயக்குநர் ஷங்கர் படைத்திருப்பார். விஜய்யின் பாத்திரம் முதிர்ச்சியான உலகை யதார்த்தமாக அணுகும் ஒரு இளைஞனின் பாத்திரம். கல்லூரியில் மனப்பாட கற்றல் முறை, புதிய விஷயங்களை ஏற்காத மனோபாவம் அதிகம் கொண்ட ஆசிரியர்களை எதிர்த்து விஜய் போராடுவார். அதை நகைச்சுவையுடன் சொல்லியுள்ளது சிறப்பு.

    ஆல் இஸ் வெல் என்பதுதான் படத்தில் இழையோடும் காட்சி. கற்றல் என்பது பாட புத்தகத்தில் மட்டுமில்லை, மனப்பாடம் செய்யாமல் உணர்ந்து படிக்கவேண்டும், தேர்வில் ராங்க் முறை கூடாது, தனக்கு எது வருமோ அதில் அதிகம் முயற்சி செய்யவேண்டும், குழந்தைகளின் கனவுகளை சிதைத்து பெற்றோர் விருப்பத்தை திணிக்கக்கூடாது, கற்பித்தல் முறையில் உள்ள குறைபாடு, சோர்வுகளை மீறி எப்படி வெல்வது உள்ளிட்ட பல பாசிட்டிவ் மெசேஜ் அதிகமாக இருக்கும்.

    கலக்கல் கதாபாத்திரங்கள்

    கலக்கல் கதாபாத்திரங்கள்

    அதையும் இவை அனைத்தையும் ஹீரோ விஜய் மூலம் மெசேஜாக சொல்லும்போது அது ரசிகர்களை எளிதில் அடைந்தது. படத்தில் கண்டிப்பான டீனாக வரும் 'வைரஸ்' சத்யராஜ், அவரிடம் சிக்கித்திணறும் மாணவர்கள், தனது கண்டுபிடிப்புக்கு அங்கிகாரம் இல்லாததால் தற்கொலை செய்துக்கொள்ளும் மாணவனாக விஜய் வசந்த், விஜய்யின் நண்பர்களாக வழக்கமான மாணவர்களாக வரும் ஜீவா, ஸ்ரீகாந்த், மனப்பாட பாடமுறையின் நவீன அறிவு ஜீவி மாணவனாக வரும் சத்யன், சில காட்சிகளே வரும் காமெடி வில்லன் எஸ்.ஜே.சூர்யா என படம் முழுவதும் பாத்திரங்கள் கலக்கியிருப்பார்கள்.

    இயல்பான கலக்கல் நகைச்சுவை காட்சிகள்

    இயல்பான கலக்கல் நகைச்சுவை காட்சிகள்

    படம் முழுக்க நகைச்சுவை காட்சிகளால் நிரப்பியிருப்பார்கள். விஜய்க்கு இயல்பாக வரும் நகைச்சுவை இந்தப்படத்தில் கூடுதலாக இருக்கும், சத்யராஜிடம் சிக்கி தவிக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் நகைச்சுவை, அதிலும் கல்யாணத்தில் ஓசிச்சாப்பாடு சாப்பிடச் சென்று அங்கு சத்யராஜிடம் சிக்கி தான் இன்வெர்டர் கண்டுபிடிப்பதற்காக வந்ததாக சமாளிக்கும் காட்சியும் கதாநாயகி இலியான அதை உடைப்பதும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட காட்சி.

    கற்றல் முறையை விமர்சித்த காட்சிகள்

    கற்றல் முறையை விமர்சித்த காட்சிகள்

    மனப்பாட முறை எவ்வளவு மோசமானது என்பதை விளக்க அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஸ்க்ரிப்டை மாற்றி வைத்து சத்யனை மாட்டிவிடும் காட்சியும், வகுப்பறையில் விளக்கமாக சொல் என்ற லெக்சரரிடம் புத்தகத்துக்கான பெரிய டிஸ்க்ரிப்ஷனை சொல்லி அசரவைப்பதும், நண்பர்கள் பெயரை மாற்றி எழுதி சத்யராஜையே திணறடிக்கும் காட்சியும் அருமை. வகுப்பறையில் சார் எதையும் புரிஞ்சுகிட்டு படிக்கணும் அல்லவா என்று சொல்வார். பெரிய விஷயத்தை சாதாரணமாக சொல்லியிருப்பார்கள்.

    கிளைமேக்ஸ் அபாரம்

    கிளைமேக்ஸ் அபாரம்

    இப்படி படத்தில் பல காட்சிகள் கட்டாயம் அனைவரும் பின்பற்றவேண்டியவைகளாக ஆழமாக பதிவு செய்யப்பட்டிருக்கும். ஹீரோயினை விரும்பும் வெளிநாட்டு பணக்கார மாப்பிள்ளை எதையும் பணமாக பார்க்கிறார் என்பதை எளிதாக விஜய் ஹீரோயின் இலியானாவுக்கு உணர்த்தும் காட்சி நகைச்சுவையான ஒன்று. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்தால் கடுப்பாகும் சத்யன் 10 ஆண்டுகள் கழித்து நான் என்ன நிலையில் இருக்கிறேன் பார் என சவால் விட்டுச் செல்வார்.

    கல்லூரி மாணவர்களால் கொண்டாடப்படும் பாடல்

    கல்லூரி மாணவர்களால் கொண்டாடப்படும் பாடல்

    10 ஆண்டுகள் கழித்து வசதியாக திரும்பி வரும் சத்யன் மிகப்பெரிய விஞ்ஞானி கொசக்சி பசப்புகழைத்தேடி வந்திருப்பதாக சொல்வார் கடைசியில் விஜய் தான் அந்த பசப்புகழ் என தெரியவரும். படம் முழுவதும் பல்வேறு பாசிட்டிவான கருத்துகள், பாடல்கள் வெகு அருமை. இந்தப்படத்தின் இசை ஹாரிஸ் ஜெயராஜ். கலக்கியிருப்பார். ஹஸ்க்.. ஹஸ்க், ஆல் ஈஸ் வெல் பாடல், அதேபோல் 'என் ஃபிரண்டா போல யாரு மச்சான்' பாடல் இன்றும் கல்லூரி விழாவில் பாடப்படுகிறது.

    நண்பன் படத்திற்காக பிரத்யோக ஒலி

    நண்பன் படத்திற்காக பிரத்யோக ஒலி

    நண்பன் படத்துக்காக பிரத்யோக ஒலி ஒன்றுக்காக அலைந்த அலைச்சலை ஹாரீஸ் ஜெயராஜ் ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார். நண்பன் படம் முழுவதும் இந்த இசை வரும், இதற்கான ஆர்ட்டிஸ்ட்டை தியேட்டர் தியேட்டராக தேடி கண்டுபிடித்துள்ளனர். இந்த பிரத்யோக ஒலி கலக்கலாக இருக்கும், மிகவும் மெனக்கிட்டது தெரியும். அந்த ஒலி இலையை சுருட்டி அதில் எழுப்பப்படும் ஒலி ஆகும்.

    10 ஆண்டுகள் கடந்தாலும் புதுமை மாறாத நண்பன் படம்

    விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல அனைத்து வகை ரசிகர்களும் ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்ட முழுமையான படம் நண்பன். பெரிய ஸ்டார் இமேஜ் கொண்ட் விஜய் முற்றிலும் மாறுபட்டு இந்தப்படத்தில் நடித்திருப்பார். பொதுவாக விஜய்க்கு இதுபோன்ற நகைச்சுவை பிடிக்குமாம், அனுபவித்து நடித்தார் என்பார்கள். படம் வெளியாகி 10 ஆண்டுகள் கடந்தாலும் இன்று பார்த்தாலும் புதிய படத்தை பார்ப்பதுபோன்ற உணர்வை ரசிகர்களுக்கு படம் ஏற்படுத்துகிறது.

    English summary
    ‘Nanban’ movie 10th year ... Vijay mixed with realistic acting ... Celebrated fans
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X