62 வயதில் இது தேவையா? இளம் நடிகையுடன் நெருக்கமாக மது அருந்திய பாலகிருஷ்ணா..மனுஷன் வாழ்றான்யா!

நடிகர் நாதமுரி பாலகிருஷ்ணா நடிகை ஹனி ரோஸுடன் நெருக்கமாக மது அருந்திய புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஹைதராபாத் : தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா விளையாட்டாகவும் கோபப்பட்டும் சில செயல்களைச் செய்து சர்ச்சையில் சிக்கிக்கொள்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

சமீபத்தில் செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் போனை தூக்கி ஏறிந்தார். ஆசை ஆசையாக இவருடன் போட்டோ எடுக்க வந்த ரசிகரின் குழந்தையை அடித்து போஸ் கொடுக்க சொன்னது என பல கிரிஞ்சான செயல்களை இவர் செய்து வருகிறார்.

தற்போது இவர் இளம் நடிகையுடன் நெருக்கமாக மது அருந்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகி உள்ளது.

நாதமுரி பாலகிருஷ்ணா

நாதமுரி பாலகிருஷ்ணா

தமிழ் திரைத்துறையில், எம்ஜிஆர் போலவே தெலுங்கு திரையுலகில் மக்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற நடிகராக இருந்தார் என்.டி. ராமராவ். தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் தலைவருமான அவரது மகன் தான் பாலகிருஷ்ணா. இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

அகாண்டா

அகாண்டா

62 வயதான நாதமுரி பாலகிருஷ்ணா தற்போது வரை ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியாக அகாண்டா திரைப்படம் தமிழ்,தெலுங்கு என இருமொழியில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்து, பாஸ் ஆபிசில் கல்லாக்கட்டியது. இந்த படத்தில் பாலகிருஷ்ணா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

வீர சிம்ஹா ரெட்டி

வீர சிம்ஹா ரெட்டி

இதையடுத்து, இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வீர சிம்ஹா ரெட்டி படம் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. இந்த படத்தில், ஸ்ருதிஹாசன், வரலக்ஷ்மி சரத்குமார், ஹனி ரோஸ்,கன்னட நடிகர் துனியா விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.

சர்ச்சை புகைப்படம்

சர்ச்சை புகைப்படம்

வீர சிம்ஹா ரெட்டி படத்தின் சக்சஸ் மீட் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகி ஹனி ரோஸூடன் பாலகிருஷ்ணா மிகவும் நெருக்கமாக கைகளை கோர்த்தபடி மது அருந்தி உள்ளார். மலையாள நடிகர் ஹனி ரோஸுடன் நந்தமுரி பாலகிருஷ்ணா மது அருந்திய புகைப்படம் காட்டுத்தீ போல பரவ, 62 வயதில் 31 வயது இளம் நடிகையுடன் ரொமான்ஸ் கேக்குதா என் பாலகிருஷ்ணாவை கண்டபடி ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த படத்தில் ஹனி ரோஸ் பாலகிருஷ்ணாவின் மனைவியாக நடித்திருந்தார். இவர் தமிழில் ஜீவா நடித்த சிங்கம் புலி படத்தில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X