நாளை முதல் திரையரங்கில் ‘அகண்டா‘ சூறாவளி… தட்டி தூக்கி மிரட்ட போறாரு பாலகிருஷ்ணா!
சென்னை: தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி 'அகண்டா' திரைப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Recommended Video
இப்படத்தில், நந்தமுரி பாலகிருஷ்ணா, பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதி பாபு‚ அவினாஷ் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை மிர்யாலா ரவீந்தர் ரெட்டி தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.

அகண்டா
நந்தமுரி பாலையா இரு வேடங்களில் நடித்து சமீபத்தில் வெளிவந்து தெலுங்கு திரையுலகை ஒரு மிரட்டு மிரட்டிய அகண்டா. டிசம்பர் 2-ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் உலகம் முழுக்க வசூலை குவித்தது. ஆந்திரா, தெலங்கானா திரையிட்ட அனைத்து திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாய் ஓடி வசூலை வாரிக்குவித்தது.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில்
ஒரு கதாபாத்திரத்திலேயே சும்மா மாஸ் காட்டி தெரிக்கவிடும் நந்தமுரி பாலையா. அகண்டா திரைப்படத்தில் சாதாரண மனிதனாகவும், அகோரியா என இருவேடத்தில் முழு நீள ஆக்ஷன் படத்தில் நடித்து மாஸ் காட்டி இருக்கிறார். சமீபத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான இப்படத்தை பார்த்த தமிழ் ரசிகர்கள் பலர் நந்தமுரி பாலையாவின் தீவிர ரசிகர்களோக மாறியுள்ளார்.

மாஸ் காட்டிய நந்தமுரி பாலையா
ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட்டுடா பாக்குறியா.. பாக்குறியா என சூர்யான சொல்லும் போதே மீம்ஸ் போட்டு தெறிக்கவிட்ட நம்ப இளசுகள். பாலகிருஷ்ணாவின் அனல் பறக்கும் அக்ஷனை பார்த்து வாயடைத்துப் போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும். பார்த்தால் பனை மரம் எறிவது, ரயிலை ஒற்றைக் கையில் நிறுத்துவது, நடந்தால் டாடா சுமோக்கள் பறப்பது என

நாளை ரிலீஸ்
போயபதி சீனு இப்படத்தினை இயக்கியிருந்தார். ஏற்கெனவே, லெஜெண்ட், சிம்ஹா' உள்ளிட்டப் படங்களில் இணைந்த போயபதி சீனு-பாலகிருஷ்ணா கூட்டணி மூன்றாவது முறையும் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளனர். அகண்டா திரைப்படத்திற்கு தமிழகத்தில் கிடைத்த வரவேற்பால் நாளை 28 ஆம் தேதி தமிழில் டப்பிங் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











