Balakrishna: விஜய்க்கு வார்னிங் கொடுத்த பாலகிருஷ்ணா... லியோவுடன் ரிலீஸாகும் பகவந்த் கேசரி
ஹைதராபாத்: தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமுரி பாலகிருஷ்ணா தற்போது பகவந்த் கேசரி என்ற படத்தில் நடித்துள்ளார்.
அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவாகும் பகவந்த் கேசரி பாலகிருஷ்ணாவின் 108வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு பகவந்த் கேசரி படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
மேலும், இந்தப் படம் விஜய்யின் லியோவுக்கு போட்டியாக ரிலீஸாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகவந்த் கேசரி டீசர் & ரிலீஸ் தேதி:தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா இன்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் பாலகிருஷ்ணாவின் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக அவர் நடித்துள்ள பகவந்த் கேசரி படத்தின் டீசரும் வெளியாகியுள்ளது.
அனில் ரவிபுடி இயக்கியுள்ள இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ஸ்ரீ லீலா, பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், தமன் இசையமைத்துள்ளார். பாலகிருஷ்ணாவின் 108வது படமான பகவந்த் கேசரி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இரு தினங்களுக்கு முன்னர் தான் வெளியானது. அப்போது தான் படத்தின் டைட்டிலையும் படக்குழு கன்ஃபார்ம் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது பகவந்த் கேசரி படத்தின் டீசரும் வெளியாகியுள்ளது.
பாலகிருஷ்ணா ராசிகர்களுக்காகவே ஸ்பெஷலாக உருவாகியுள்ள இந்த டீசர், ஆரம்பம் முதலே ஆக்ஷனில் அதிர வைக்கிறது. பாலகிருஷ்ணா நடிப்பில் இறுதியாக வெளியான அகண்டா, வீர சிம்ஹா ரெட்டி படங்களுக்கு சவால் விடும் வகையில், பகவந்த் கேசரியில் ஆக்ஷன் காட்சிகள் கோரியோகிராபி செய்யப்பட்டுள்ளன. அந்தரத்தில் பறந்துகொண்டே எதிரிகளை துவம்சம் செய்யும் பாலய்யாவின் டெடிகேஷனை பார்க்கும் போது ரோலிவுட் ரசிகர்கள் மெய்சிலிர்த்து நிற்கின்றனர்.
ஆக்ஷனில் மட்டும் இல்லாமல் பஞ்ச் வசனம், டான்ஸ், சென்டிமெண்ட் என ஒவ்வொரு செகண்ட்டுக்கும் பாலய்யா நடிப்பில் மிரட்டிவிட்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பகவந்த் கேசரி படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படம் வரும் ஆயுத பூஜை விடுமுறைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே ஆயுத பூஜை விடுமுறையில் தான் விஜய்யின் லியோ படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பகவந்த் கேசரி படத்தின் டீசருடன் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளதால், பாலய்யாவின் பிறந்தநாளையும் சேர்த்து அவரது ரசிகர்களுக்கு இன்று ட்ரிபிள் தமாக்கா எனலாம். அதனால், பகவந்த் கேசரி படத்தின் டீசரையும் ரிலீஸ் தேதியையும் டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்தப் படம் ஆயுத பூஜைக்கு வெளியாவதால் விஜய்யின் லியோவுக்கு ஆந்திராவில் திரையரங்குகள் கிடைப்பதில் பிரச்சினை இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
இதனிடையே பகவந்த் கேசரி டீசரின் இறுதியில் பாலய்யா டான்ஸ் ஆடும் வீடியோ செம்ம வைரலாகி வருகிறது. கிரிக்கெட் பேட்டை கிடாராக மாற்றி வைப் செய்யும் பாலய்யாவை அவரது ரசிகர்கள் இமை மூடாமல் ரசித்து வருகின்றனர். அதேநேரம் பாலய்யாவின் பகவந்த் கேசரி டீசரை நெட்டிசன்கள் சில வழக்கம்போல வச்சு செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











