Balakrishna: அமிதாப் மாமாவுக்கு கோபம் வந்துடுச்சு மொமண்ட்... பாலகிருஷ்ணாவின் NBK 108 டைட்டில் ரிலீஸ்
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நந்தமுரி பாலகிருஷ்ணா தனது 108வது படத்தில் நடித்து வருகிறார்.
அனில் ரவிபுடி இயக்கும் இந்தப் படத்தில் பாலய்யா ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
ரசிகர்களுக்கான ஆக்ஷன் பேக்கேஜாக உருவாகும் இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
பாலய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இந்தப் போஸ்டரில் அவரின் லுக் டோலிவுட் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது.
பகவந்த் கேசரியாக நந்தமுரி பாலகிருஷ்ணா: தெலுங்கு சூப்பர்ஸ்டார் மறைந்த NTR-இன் மகனான நந்தமுரி பாலகிருஷ்ணா டோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக கலக்கி வருகிறார். 1974ம் ஆண்டு வெளியான தத்தம்மா கலா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பாலய்யா, இன்னும் அதே எனர்ஜியோடு நடித்து வருகிறார். 50 ஆண்டுகளாக டோலிவுட் ரசிகர்களின் எனர்ஜி பூஸ்டர் பாலய்யா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒற்றை கையால் ஆல மரத்தை புடுங்கி வீசி எறிவது, ஒரே அடியில் 100 பேரை அந்தரத்தில் பறக்கவிடுவது, ஓங்கி ஒரு மிதிவிட்டால் 10 லாரிகளும் பார்ட் பார்ட்டாக பழைய இரும்புக் கடையில் போய் விழுவது என கிராவிட்டிக்கே சவால் விடும் வகையில் ஆக்ஷனில் மிரட்டுபவர் பாலய்யா. இதுபற்றி சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியே வியந்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
60வது வயதிலும் முஷ்டியை முறுக்கிக் கொண்டு, கண்கள் சிவக்க வீர வசனம் பேசி நடித்து வருகிறார் பாலகிருஷ்ணா. இதையெல்லாம் கொண்டாடித் தீர்க்கும் டோலிவுட் ரசிகர்களுக்கு கைமாறு செய்வதற்காக மீண்டும் ஒரு ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார். அதன்படி அவரது 108வது படத்தை அனில் ரவிபுடி இயக்கி வருகிறார். பாலய்யா ஜோடியாக காஜல் அகர்வால், பிரியங்கா ஜவால்கர் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
NBK 108 என்ற டைட்டிலில் உருவாகி வந்த இந்தப் படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி பகவந்த் கேசரி என டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளதோடு, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. வரும் 10ம் தேதி பாலகிருஷ்ணாவின் பிறந்தநாள் என்பதால், இப்போதே டைட்டிலை வெளியிட்டு ட்ரீட் கொடுத்துள்ளார் இயக்குநர் அனில் ரவிபுடி. பகவந்த் கேசரியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் செம்ம மாஸ்ஸாக வெளியாகியுள்ளது.
கையில் செங்கோல் போன்ற பெரிய ஆயுதத்துடன் தரையில் ஒருகால் முட்டியிட்டு கர்ஜிக்கிறார் பாலய்யா. சால்ட் & பெப்பர் லுக் ஹேர் ஸ்டைலில் பிரவுன் கலர் குர்தா, பிளாக் கலர் பேண்ட் அணிந்து இன்னும் வெறித்தனமாக எனர்ஜி கூட்டியுள்ளார். அதேபோல் பாலய்யாவின் பின்னணியில் இருக்கும் செட்டிங்கும் ஆக்ஷன் மோடில் உள்ளது. இந்தப் போஸ்டரை டோலிவுட் ரசிகர்கள் கொண்டாடி வருவதோடு டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
அதேநேரம் கோலிவுட் ரசிகர்கள் பாலய்யாவின் பகவந்த் கேசரி ஃபர்ஸ்ட் லுக்கை ட்ரோல் செய்து வருகின்றனர். கலகலப்பு படத்தில் வரும் 'அமிதாப் மாமாவுக்கு கோபம் வந்துடுச்சே' என்ற கேப்ஷனுடன் இன்னும் எத்தனை தல உருளப் போகுதோ என வெரைட்டியாக கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











