Akhanda 2: பாலைய்யாவின் ருத்ரதாண்டவம்.. அகண்டா 2 படம் எப்படி இருக்கு? பொதுமக்கள் விமர்சனம்!
சென்னை: 2021 ஆம் ஆண்டு வெளிவந்த அகண்டா' முதல் பாகம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதில் பாலைய்யா நடித்த சிவ-பக்தி கலந்த அகண்டா கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்தது. படத்தில் காணப்பட்ட மாஸ், ஆக்ஷன், பஞ்ச் டயலாக், பின்னணி இசை, ஆன்மிக கலந்த கதை அனைத்தும் படத்தை பிளாக்பஸ்டர் நிலைக்கு கொண்டு சென்றன. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கில் இன்று வெளியாகி உள்ளது. 'அகண்டா 2' வில் பாலைய்யாவுடன், விஜி சந்திரசேகர், ஆதி, சம்முக்தா, கபீர் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பொதுமக்கள் விமர்சனத்தை பார்க்கலாம்.
படம் பார்த்த ரசிகர் ஒருவர் படம் பிளாக் பஸ்டர் ஹிட் தான், இமயமலையில் இருந்து வரும் ஒரு காட்சி படத்தில் உள்ளது. அந்த காட்சியில் பாலைய்யா ருத்ரதாண்டவம் ஆடி இருக்கிறார். சனாதன தர்மம் என்பதை படத்தில் சொல்லி இருக்கிறார். முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் சூப்பராக இருக்கிறார். படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் மாஸ் என்றார்.

ருத்ரதாண்டவம்: அகண்டா 2 படத்தில் பாலைய்யா அட்டகாசமாக நடித்து இருக்கிறார். இந்த கலியுகத்தில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது. அனைவரும் சாமிவேண்டாம், கோவில் வேண்டாம் என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு படம் புகட்டும் கையில் அனைத்தும் படத்தில் சொல்லப்பட்டுள்ளது. பாலைய்யாவின் ரசிகர்களுக்கு என்ன தேவையோ அவை அனைத்தும் படத்தில் உள்ளது. அதே போல, குடும்பங்கள் பார்க்கும் திரைப்படமாகவும் இப்படம் உள்ளது. ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை படத்தின் பெயருக்கு ஏற்றார் போல அகண்டா 2 தாண்டவமாடுகிறது. அனைவரும் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் இது.
கிளைமாக்ஸ் சூப்பர்: முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தின் திரைக்கதை வேறமாதி இருக்கு, பாலைய்யா அட்டகாசமாக நடித்துள்ளார். அகண்டா 2 வில் எதிர்பாராத பல விஷயத்தை சொல்லி இருக்கிறார். ஆந்திராவில் ஆரம்பித்து படத்தை இந்தியாவின் எல்லை இமயமலைக்கு கொண்டு சென்றுவிட்டார். படம் பார்ப்பது போல இல்லாமல் தெய்வத்தை பார்ப்பது போல இருந்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கும் திரைப்படமாக இப்படம் இருக்கு, ஜெய் பாலைய்யா என அகண்டா 2 படம் பார்த்தவர்கள் மகிழ்ச்சியில் கோஷமிட்டனர்


Click it and Unblock the Notifications











