"KGF Gun Scene" சும்மா தூசி.. அகண்டா 2ல் இந்த சீனை பாருங்க.. பாலைய்யா சுத்தி சுத்தி அடிக்குறாரே!
சென்னை: தெலுங்கு திரைப்பட உலகில் எதிர்பார்ப்பை தூண்டும் கூட்டணியாக, நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் இயக்குனர் போயபதி சீனு இணையும் படமாக உள்ளது.. அந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் ஒன்றிணைந்திருக்கும் 'அகண்டா 2' படம் வரும் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், கேஜிஎப் படத்தை காப்பியடித்து சில காட்சிகளை வைத்து இருக்கிறார்கள். அது என்ன என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.
பாலைய்யா என்றாலே, அதிரடி பஞ்ச் வசனமும், அதிரடியான சண்டை தான். அவரின் வசனத்தை திரையில் பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படி அதிரடியான வசனத்துடன் கடந்த, 2021 ஆம் ஆண்டு வெளிவந்த அகண்டா முதல் பாகம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதில், பாலைய்யா நடித்த சிவ-பக்தி கலந்த அகண்டா கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்தது. படத்தில் காணப்பட்ட மாஸ், ஆக்ஷன், பஞ்ச் டயலாக், பின்னணி இசை, ஆன்மிக கலந்த கதை அனைத்தும் படத்தை பிளாக் பஸ்டர் நிலைக்கு கொண்டு சென்றது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என படத்தின் இயக்குநர் போயபதி சீனு அறிவித்து அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டு படம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

பாலைய்யாவின் அகண்டா 2 டிரைலர்: 'அகண்டா 2'ல் பாலகிருஷ்ணா மீண்டும் அதே தீவிரமான, தெய்வீக சக்தியை தாங்கிய கதாபாத்திரத்தில் தோன்றுவார் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். முதல் பாகத்தை விட இருமடங்கு ஆக்ஷன் காட்சிகளும், அதிகமான மாஸ் சீன்களும், ஆன்மீகத் தளம் போன்றவை இதில் இருக்கும் என படக்குழுவினர் என ஏற்கனவேஅறிவித்து இருந்தனர். தற்போது அகண்டா 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. டிரைலரில் ரத்தமும் சதையுமா பாலைய்யா சம்பவம் செய்து இருக்கிறார். குறிப்பாக பாலைய்யாவின் ஸ்கிரின் பிரசென்ஸ், சிவனை பிதிபலிக்கும் கெட்டப், அவருக்கே உரிய மாஸ் டயலாக்கள் டிரைலரில் இடம் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
200 கோடி பட்ஜெட்: 'அகண்டா' முதல் பாகம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில், இரண்டாம் பாகம் அதையும் கடந்து செல்லும் என ரசிகர்கள் நம்புகின்றனர். மேலும், டிசம்பர் 5ந் தேதி திரைப்படம் வெளியாக உள்ளது. டிசம்பர் மாதம் என்பதால் கிறிஸ்துமஸ் விடுமுறை, நியூ இயர் விடுமுறை உள்ளதால், இந்த படம் நிச்சயமாக நல்ல வசூலை அள்ளி கல்லாவை நிரம்பும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 'அகண்டா 2' பாலைய்யாவுடன், விஜி சந்திரசேகர், ஆதி, சம்முக்தா, கபீர் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
கேஜிஎஃப் பெரியப்பா: அகண்டா 2 படத்தில் வரும் பல காட்சியில் பாலைய்யா சம்பவம் செய்து இருக்கிறார். சிவ கெட்டப்பில் தண்ணீருக்குள் நின்று கொண்டு கையில் தண்டத்தை வைத்து மாஸ் வசனத்தை பேசுகிறார். அதோடு இல்லாமல் கேஜிஎஃப் சாப்டர் ஒன் படத்தில் யாஷ் துப்பாக்கி சுடும் காட்சி வரும் அதில் பெரியப்பாவை வைத்து அனைவரையும் சுட்டுத்தள்ள மிரட்டி விடுவார். அதே போல அகண்டா 2 படத்தில் ஒரு காட்சி டிரைலரில் இடம் பெற்றுள்ளது. அதில், பாலைய்யா கேஜிஎஃப் பெரியப்பா போல ஒரு பிரம்மாண்ட Gun ன்னை தனது தண்டத்தால் மாறி மாறி சுடுகிறார். இந்த காட்சியை பார்க்கும் போது, பாலைய்யா , யாஷ்க்கே டாப் கொடுப்பார் போல என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.


Click it and Unblock the Notifications











