Bimbisara Twitter Review: டோலிவுட்டுக்கு இன்னொரு பாகுபலியாக மாறுமா இந்த பிம்பிசாரா?

ஹைதராபாத்: நந்தமுரி குடும்பத்தின் இன்னொரு நடிகரான நந்தமுரி கல்யாண் ராம் நடிப்பில் இன்று வெளியாகி உள்ளது பிம்பிசாரா.

500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிம்பிசாரா எனும் அரசன் டைம் டிராவல் செய்து நவீன உலகத்திற்கு ஒரு மிஷனுக்காக வருவதும், அதை முடித்தாரா இல்லையா? என்பது தான் இந்த படட்தின் கதை.

இந்த படத்தில் சம்யுக்தா மேனன், கேத்தரின் தெரசா, வரீனா உசைன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ட்விட்டரில் ரசிகர்கள் என்ன மாதிரியான விமர்சனத்தை கொடுத்துள்ளனர் என்பது குறித்து இங்கே பார்ப்போம்..

பாகுபலி போல

பாகுபலி போல

பாகுபலி படத்திற்கு பிறகு ஏகப்பட்ட ராஜாங்க கதைகள் நாடு முழுவதும் மீண்டும் உருவாகி வருகின்றன. டோலிவுட்டில் வெறும் 40 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்துள்ளன. ஆரம்பத்தில் ஸ்லோவாக ஆரம்பிக்கும் பிம்பிசாரா படத்தின் கதை 20 நிமிடங்கள் கழித்து பிக்கப் ஆகிறது என பலரும் பாராட்டி வருகின்றனர். டோலிவுட் திரையுலகுக்கு மீண்டும் ஒரு பாக்ஸ் ஆபிஸ் வெற்றி படமாக இந்த பிம்பிசாரா மாறும் என ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

டைம் டிராவல்

டைம் டிராவல்

வழக்கமாக எதிர்காலத்தில் இருந்து டைம் டிராவல் செய்து தான் நிகழ் காலத்திற்கு பலரும் வருவார்கள் அல்லது, நிகழ் காலத்தில் டைம் டிராவல் செய்து கடந்த காலத்துக்கோ அல்லது எதிர்காலத்துக்கோ செல்வார்கள். ஆனால், இயக்குநர் மலிடி வசிஷ்டா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த பிம்பிசாரா படத்தில் பிம்பிசாரா எனும் மன்னன் டைம் டிராவல் செய்து வருவது போன்ற வித்தியாசமான கதையை குறைவான பட்ஜெட்டில் நிறைவாக எடுத்துள்ளார் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஏகப்பட்ட ட்விஸ்ட்

ஏகப்பட்ட ட்விஸ்ட்

சிஜிக்கு பெரிதாக பல கோடிகளை செலவு செய்யவில்லை என்றாலும், திரைக்கதையில் ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளை வைத்து ரசிகர்களை நகர விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் என்றும் நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் நடிப்பில் பக்காவாக ஸ்கோர் செய்து சரியான கம்பேக் கொடுத்திருக்கிறார். இடைவேளை காட்சி எல்லாம் மிரட்டல் என விமர்சனங்கள் வெளியாகி உள்ளன.

ஜூனியர் என்டிஆர் சப்போர்ட்

ஜூனியர் என்டிஆர் சப்போர்ட்

சீதா ராமம் படத்திற்கு நடிகர் பிரபாஸ் சப்போர்ட் செய்த நிலையில், பிம்பிசாரா படத்துக்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது ஆதரவை அளித்திருந்தார். நந்தமுரி குடும்பத்தின் வாரிசு நடிகர் என்பதால் ஜூனியர் என்டிஆரின் முழு ஆதரவும் இந்த படத்துக்கு கிடைத்துள்ளது. இரண்டு படங்களும் போட்டி போடவில்லை என்றும், தெலுங்கு சினிமாவை மீட்கவே போராடி வருவதாக படம் வெளியாவதற்கு முன்னதாக வைஜெயந்தி சினிமாஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X