பெண் இயக்குநர் நந்தினியின் புதிய படம் ‘கொலை நோக்கு பார்வை’!

By Shankar

Nandhini
இரு ஆண்டுகளுக்கு முன் திருதிரு துரு துரு என்றொரு படம் வந்தது நினைவிருக்கலாம்.

இந்தப் படத்தை இயக்கிய நந்தினி, தனது அடுத்த படத்துக்கு கொலைநோக்குப் பார்வை என்று பெயரிட்டுள்ளார்.

இது முழுக்க முழுக்க துப்பறியும் திரைக்கதையை மையமாக வைத்து உருவாக்கப்படும் படமாகும்.

மகளிர் தினமான இன்று தன் படத்தை அறிவித்துள்ளார் நந்தினி. ஆனால் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை துவங்க உள்ளனர்.

இப்படத்தை லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கிறார். இந்நிறுவனம் தயாரிக்கும் 4-வது படம் இதுவாகும்.

ஏற்கெனவே இந்நிறுவனம் நளனும் நந்தினியும், சுட்டகதை, கரு.பழனியப்பன் இயக்கும் புதிய படம் என ஏற்கெனவே 3 படங்களை தயாரித்து வருகிறது.

5 வது படமாக சிபிராஜ் நடிக்கும் படத்தையும் தயாரிக்கிறது.

முதல் முயற்சியிலேயே தொடர்ந்து 5 படங்களோடு லிப்ரா நிறுவனம் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

"நிறைய புதுமுகங்களை உற்சாகப்படுத்த வேண்டும், நியாயமான பட்ஜெட்டில் நிறைவான படம் பண்ண வேண்டும்," என்ற ஆர்வம்தான் இத்தனை படங்களைத் தயாரிக்கத் தூண்டியுள்ளது என்கிறார் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X