ஆஸ்திரேலிய தொழிலதிபருடன் காதல்.. 2வது திருமணத்திற்கு தயாராகும் பிரபல நடிகை.. விரைவில் டும்டும்டும்!
நந்தினி சீரியல் நடிகை நித்யா ராம் ஆஸ்திரேலிய தொழிலதிபர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: நந்தினி சீரியல் நடிகை நித்யா ராம் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை நித்யா ராம். கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'மொட்டு மனசே' எனும் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின்னர் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

முதலில் கன்னட டிவி தொடர் ஒன்றில் நடித்தார். அந்த தொடர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அவள்' என்ற தொடர் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதையடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி எனும் சீரியலில் கங்கா எனும் கதாபாத்திரத்தில் நித்யா நடித்தார். இந்த சீரியல் மூலம் அவர் மிகவும் பிரபலமானார்.
நித்யாராம் கடந்த 2014 ஆம் ஆண்டு வினோத் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.ஆனால் அந்த திருமணம் தோல்வியில் முடிந்தது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.
இந்நிலையில் நடிகை நித்யா ராம் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை நடிகை நித்யா ராம் காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











