பயமுறுத்தும் கண்களுடன் நடிகை நந்திதா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அலறல்!

சென்னை : அனைவரும் நடிகை நந்திதா குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பார் என நினைத்துக்கொண்டிருக்க தடாலென கவர்ச்சிக்கு மாறி உள்ளார்.

கபடதாரி, ஈஸ்வரன், நெஞ்சம் மறப்பதில்லை என சமீபத்தில் வெளியான படங்கள் இவருக்கு நற்பெயரை பெற்றுத் தந்துள்ளது.

இந்த நிலையில் பயமுறுத்தும் கண்களுடன் நடிகை நந்திதா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

திருப்புமுனையாக

திருப்புமுனையாக

சமீப காலமாக வித்தியாசமான கதைகளில் நடித்து அனைவரையும் வியக்க வைத்து வருபவர் நடிகை நந்திதா. தொடர்ந்து காதல் கதைகளில் அடுத்து வந்த இவர் செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வித்தியாசமான நெகட்டிவ் ரோலில் நடித்து பிரமாத படுத்தி இருப்பார். கடைசி வரையிலும் சர்ப்ரைஸ் உடன் நகர்ந்து செல்லும் கதையில் திருப்புமுனையாக இவரது கதாபாத்திரம் அமைந்திருக்கும்.

சிம்புவின் காதலியாக

சிம்புவின் காதலியாக

கதாநாயகியாக வலம் வந்தவர் சிம்புவின் ஈஸ்வரன் திரைப் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து இருப்பார். சுசீந்திரனின் இயக்கத்தில் வெளியாகியிருந்த இந்த படத்தில் சிம்புவின் காதலியாக நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றார்.

Recommended Video

நந்திதா சேலை கவர்ச்சியில் ரம்யா பாண்டியனையே தூக்கி சாப்டுட்டாரே
போலீஸ் அதிகாரியாக

போலீஸ் அதிகாரியாக

தற்போதைக்கு மற்ற மொழிகளில் கவனம் செலுத்தாமல் தமிழில் மட்டுமே நடித்து வரும் நந்திதா ஐபிசி 376 என்ற திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக லீட் ரோலில் நடிக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதை என்பதால் அதற்காக தனியாக மெனக்கெட்டு இந்த படத்திற்காக தன்னை தயார் செய்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.

பாக்கவே பயங்கரமா

பாக்கவே பயங்கரமா

கபடதாரி,ஈஸ்வரன், நெஞ்சம் மறப்பதில்லை என சமீபத்தில் நந்திதாவுக்கு வெளியான அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான ரெஸ்பான்ஸ் கொடுக்க இயக்குனர்கள் வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு இவரை அணுகி வருகின்றனர். இந்த நிலையில் தான் செல்ல பூனை குட்டியுடன் எடுத்த பயமுறுத்தும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அலற விட்டுள்ளார் . கருப்பு நிறத்தில் வெள்ளை கண்களுடன் இருக்கும் அந்தப் பூனைக்கு லக்கி என பெயர் சூட்டி இருக்க. லக்கி மற்றும் நந்திதா இருவரும் கண்களை விரைத்து பார்த்தபடி பயமுறுத்தும் கணக்கில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டதை பார்த்த ரசிகர்கள் பாக்கவே பயங்கரமா இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: nandhitha நந்திதா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X