தாயாகும் விஜய் சேதுபதியின் குமுதா: 8 கிலோ வெயிட் குறைந்துவிட்டதாம்
Recommended Video

சென்னை: சாய் பல்லவியை அடுத்து நந்திதா ஸ்வேதாவும் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்வு செய்துள்ளார்.
நந்திதா ஸ்வேதா நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலியேயே உள்ளார். இருப்பினும் மனம் தளராமல் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
அவர் நடித்த காத்திருப்போர் பட்டியல் படம் கடந்த வாரம் வெளியானது.

கீதா
புதுமுகம் கீதா ராஜ்புட் இயக்கும் படத்தில் நந்திதா 7 வயது பையனுக்கு தாயாக நடிக்கிறார். புதுமுகம் ரினேஷ் நந்திதாவின் மகனாக நடிக்க உள்ளார்.

எம்.எஸ். பாஸ்கர்
நந்திதாவை சுற்றி நகரும் கதையில் விஜய் வசந்த், எம்.எஸ். பாஸ்கர், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு 15ம் தேதி துவங்குகிறது.

பாலா
பாலா உள்ளிட்ட பல இயக்குனர்களிடம் உதவியாளராக வேலை செய்தவர் கீதா. அவரின் முதல் படத்தின் படப்பிடிப்பு சென்னை, நாகர்கோவில், நெல்லை மற்றும் ஹைதராபாத்தில் நடக்க உள்ளது.

கதாபாத்திரம்
கீதாவின் படத்திற்காக நந்திதா ஏற்கனவே 8 கிலோ எடையை குறைத்துள்ளாராம். நந்திதாவின் கதாபாத்திரம் சவாலானதாகவும், வித்தியாசமானதாகவும் இருக்குமாம். இந்த படத்திற்கு பிறகு நந்திதாவின் கெரியர் பிக்கப்பாகிவிடும் என்று நம்பப்படுகிறது.

அம்மா
அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க ஹீரோயின்கள் பயந்த காலம் மலையேறிவிட்டது. நயன்தாரா, அமலா பால், சாய் பல்லவி ஆகிய முன்னணி நடிகைகளே தாயாக நடித்து அசத்திவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











