திண்டுக்கல்லில் ஷூட்டிங்.. சுசீந்திரன் இயக்கும் படத்தில் சிம்புவுக்கு தங்கச்சியான பிரபல ஹீரோயின்!

By

சென்னை: சிம்பு படத்தில் பிரபல ஹீரோயின் அவர் தங்கையாக நடிக்கிறார்.

சிம்பு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் சுசீந்திரன். கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இதன் ஷூட்டிங், திண்டுக்கல்லில் தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார்.

ஒஸ்தி, வாலு

ஒஸ்தி, வாலு

சிம்பு ஜோடியாக, நிதி அகர்வால் நடிக்கிறார். இவர், ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் பூமி படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்தியில், முன்னா மைக்கேல் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் இவர். இந்தப் படத்துக்கு தமன் இசை அமைக்கிறார். இவர், ஏற்கனவே, சிம்புவின் ஒஸ்தி, வாலு படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

மாதவ் மீடியா

மாதவ் மீடியா

ஜீரோ, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களைத் தயாரித்த மாதவ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் 26 ஆம் தேதி விஜயதசமி அன்று படக்குழு வெளியிடுகிறது. இதில் சிம்பு ஸ்லிம்மாக, வேற லெவலில் இருப்பார் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்பெஷல் வீடியோ

ஸ்பெஷல் வீடியோ

இதற்கிடையே நீண்ட காலத்துக்கு பிறகு சமூக வலைதளத்தில் இணைந்துள்ளார், நடிகர் சிம்பு. இதற்காக ஸ்பெஷல் வீடியோவை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கடுமையாக மேற்கொள்ளும் உடற்பயிற்சி, சிலம்பம், நடனம், யோகா, தற்காப்பு கலை பயிற்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ வைரலானது.

சிம்பு தங்கச்சி

சிம்பு தங்கச்சி

இந்நிலையில், சுசீந்திரன் இயக்கும் படத்தில், நடிகை நந்திதா ஸ்வேதா கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இவர் இதில் சிம்புவுக்கு தங்கையாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. நடிகை நந்திதா ஸ்வேதா, அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார்.

மாநாடு ஷூட்டிங்

மாநாடு ஷூட்டிங்

சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் ஷூட்டிங் நவம்பரில் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி, கருணாகரன் உள்பட பலர் நடிக்கின்றனர். அதற்குள் இந்தப் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X