சிவகார்த்திகேயன், சந்தானம், மா.கா.பா வரிசையில் விஜய் டி.வி-யிலிருந்து இன்னொரு ஹீரோ!
Recommended Video

சென்னை : விஜய் டி.வி-யில் நிகழ்ச்ச்சித் தொகுப்பாளராக இருந்து சிவகார்த்திகேயன், சந்தானம், மா.பா.கா.ஆனந்த் உள்ளிட்ட பலர் சினிமாவில் ஹீரோவாகியிருக்கிறார்கள்.
அந்த வரிசையில் அடுத்து ஹீரோவாகியிருக்கிறார் ஜெகன். விஜய் தொலைக்காட்சியில் 'மனிதன் பாதி மிருகம் பாதி' என்ற நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் ஜெகன்.
நண்டு ஜெகன் விஜய் டி.வி-யில் இப்போதும் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் இப்போது ஹீரோவாக அறிமுகமாகிறார்.

காமெடியன் நண்டு ஜெகன்
ஜெகன், 'கண்ட நாள் முதல்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானார். பல படங்களில் காமெடியானாக நடித்தாலும் அயன் படம் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது.

ஹீரோவாக அறிமுகம்
அதன் பிறகு கோ, அம்புலி, பையா, மரியான், நான் சிவப்பு மனிதன், மாப்பிள்ளை உள்பட 40க்கும் மேற்பட்ட படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். தற்போது 'எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல' படத்தின் மூலம் ஹீரோவாகியிருக்கிறார்.

போலீஸ் கான்ஸ்டபிளாக ஜெகன்
இந்தப் படத்தில் அவர் போலீஸ் கான்ஸ்டபிளாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரஹானா என்ற புதுமுகம் நடிக்கிறார். பாடலாசிரியர் பிறைசூடன் வில்லனாக நடிக்கிறார். சிவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், முருகலிங்கம் என்ற புதுமுக இயக்குநர் இப்படத்தை இயக்குகிறார்.

படத்தின் கதை
'எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல' காமெடி படமாக உருவாகிறதாம். கிராமத்தில் ஒரு பசுமாடு காணாமல் போகிறது. அந்த மாட்டை கண்டுபிடித்து கொடுக்கும் பொறுப்பு ஹீரோவான கான்ஸ்டபிளிடம் கொடுக்கப்படுகிறது. அவர் எப்படி மாட்டை கண்டுபிடிக்கிறார். அதற்குள் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் படத்தின் கதையாம்.


Click it and Unblock the Notifications











