twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சஸ்பென்ஸுடன் வெளியாகும் ’நானே வருவேன்’..தனுஷுக்கு இன்னொரு வெற்றிபடமாக அமையுமா?

    |

    சென்னை: ஒன்றல்ல இரண்டு வேடம், இல்லையில்லை ஒரே வேடம் தான் இப்படி சஸ்பென்சுடன் வெளியாகிறது நானே வருவேன்.

    தனுஷுக்கு இது வெற்றிப்படமாக அமையுமா, படத்தை வெளியிடுவதில் கைதேர்ந்த தாணு வெற்றிப்படமாக ஆக்குவாரா? ஆவலில் உள்ளனர் ரசிகர்கள்.

    தனுஷ் செல்வராகவன், யுவன் கூட்டணி என்றுமே தோற்றதில்லை. இதிலும் அப்படி நடக்கும் என நண்பர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    வாரிசு, துணிவு படத்துடன் மோதும் பிரபாஸின் 'ஆதி புருஷ்' ஐமேக்ஸ்-3-D படம்..அயோத்தியில் டீசர் வெளியீடுவாரிசு, துணிவு படத்துடன் மோதும் பிரபாஸின் 'ஆதி புருஷ்' ஐமேக்ஸ்-3-D படம்..அயோத்தியில் டீசர் வெளியீடு

     திருச்சிற்றம்பலத்துக்கு நேர் எதிர் படம் நானே வருவேன்

    திருச்சிற்றம்பலத்துக்கு நேர் எதிர் படம் நானே வருவேன்

    நடிகர் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் செப்.29 வெளியாகிறது. இந்தப்படம் தனுஷுக்கு இன்னொரு வெற்றிப்படமாக அமையுமா? இந்தப்படம் திருச்சிற்றம்பலம் படம் போல் அல்லாமல் பழிவாங்கும் உணர்ச்சியுடன் திரியும் ஒரு இளைஞனின் கதையாக உள்ளது. திருச்சிற்றம்பலம் சண்டைக்கு பயந்து ஒதுங்கும் இளைஞர் என்றால் நானே வருவேன் கொலைக்கு அஞ்சாத இளைஞர் கதை. ஆகவே இது முற்றிலும் வேறுபட்ட கதைதான்.

     தன் குடும்பத்தை காப்பாற்றிய யுவன் தனுஷ் சொன்ன கதை

    தன் குடும்பத்தை காப்பாற்றிய யுவன் தனுஷ் சொன்ன கதை

    தனுஷின் கிரே மேன், திருச்சிற்றம்பலம் அவருக்கு நிறைவைத்தந்தது. நானே வருவேன் அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். தனுஷ், செல்வராகவன், யுவன் கூட்டணி எப்போதும் வெற்றிக்கூட்டணி. முதல்படமான துள்ளுவதோ இளமை தனுஷ், செல்வராகவன் இருவருக்குமே முதல்படம். வென்றால் தான் தங்கள் குடும்ப நிலை சரியாகும் இல்லையென்றால் நடுத்தெருதான் என்ற நிலையில் யுவன் அமைத்த இசையால் படம் நன்றாக ஓடியது. அந்தவகையில் யுவனுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன் என தனுஷ் ஒரு பட விழாவில் பேசினார். அந்த அளவுக்கு இந்த காம்போவில் யுவனின் பங்கு உள்ளது.

     முதல் படத்தின் காம்போ நானே வருவேனில் 11 ஆண்டுக்கு பின் வந்துள்ளது.

    முதல் படத்தின் காம்போ நானே வருவேனில் 11 ஆண்டுக்கு பின் வந்துள்ளது.

    தனுஷின் முதல் படம் அவர் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வந்த துள்ளுவதோ இளமை. இதன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, அடுத்து அவரது அண்ணனின் இயக்கத்தில் வந்த காதல் கொண்டேன் படமும் யுவன் இசை. அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் வந்த புதுப்பேட்டையிலும் யுவன் ஷங்கர் ராஜா இசை. செல்வராகவன் கதையில் வந்த படம் யாரடி நீ மோகினி இதிலும் யுவன் ஷங்கர் ராஜா இசை, அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாலை நேரத்து மயக்கம் படத்துக்கு யுவன் இசை அமைத்தார். இந்த காம்போவின் கடைசி படம் இதுதான். 2011 க்குப்பிறகு 11 ஆண்டுகள் கழித்து இந்த மூவர் கூட்டணி என்பதால் மேலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

     இந்த ஆண்டு தனுஷுக்கு வெற்றி ஆண்டாக அமையுமா?

    இந்த ஆண்டு தனுஷுக்கு வெற்றி ஆண்டாக அமையுமா?

    படத்தின் கதை இதுவரை சஸ்பென்ஸாக உள்ளது. தனுஷ் ஒரு வேடமா, இரண்டு வேடமா? இரண்டு வேடம் என்றால் படக்குழு ஏன் அறிவிக்கவில்லை. இதுபோன்ற சஸ்பென்ஸுக்கு காலை 8 மணி முதல் ஷோ முதல் காட்சியில் விடை தெரிந்துவிடும். ஆனாலும் தனுஷை அப்பாவியாகவும், முரட்டுத்தனமாக கொலைச் செய்யும் இளைஞராகவும் காட்டுவதால் எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இந்தப்படமும் தனுசுக்கு வெற்றிப்படமாக அமைந்தால் இந்த ஆண்டு தனுஷுக்கு வெற்றி ஆண்டுதான்.

    English summary
    Not one this is two roles, no, no it's just a single role. is released with suspense like this I will come myself. Will it be a hit for Dhanush and will Dhanu who has chosen to release the film make it a hit? Fans are excited. Dhanush Selvaraghavan and Yuvan alliance has never lost. Fans are confident that the same will happen in this case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X