Hi Nanna Teaser: ராஷ்மிகாவை தொடர்ந்து மிருணாள் லிப் லாக் மழை.. கொடுத்து வச்ச நானி.. ஹாய் நானா!

சென்னை: தசரா படத்தில் மிரட்டலான தோற்றத்தில் ரத்தம் தெறிக்க தெறிக்க நானி நடித்த நிலையில், மீண்டும் ஒரு க்யூட்டான படத்தை தனது ரசிகர்களுக்கு கொடுக்க தயாராகி விட்டார்.

ராஜமெளலி இயக்கிய நான் ஈ படத்தில் சமந்தாவின் காதலராக சில சீன்களே வந்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்களை இன்றளவும் பிடித்துள்ளார் நானி. அவர் நடிப்பில் வெளியான ஜெர்ஸி படத்துக்கு இந்தியா முழுக்க ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

Nani and Mrunal Thakur starring Hi Nanna teaser out now

சீதா ராமம் படத்தில் ராணி போல வந்த மிருணாள் தாகூர் தொடர்ந்து எக்ஸ்ட்ரா கிளாமரில் அதிரடி காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைக்கிறார்.

ராஷ்மிகாவை மிஞ்சும் முயற்சி: அனிமல் படத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா லிப் லாக் முத்தம் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ள நிலையில், அப்பா மகள் பாச படமாக ஹாய் நான்னா உருவாகி இருக்கும் என்று பார்த்தால் மிருணாள் தாகூர் சும்மா வளைத்து வளைத்து அந்த 1.41 நிமிட டீசரில் முத்த மழையை பொழிந்து தள்ளியிருக்கிறார்.

Nani and Mrunal Thakur starring Hi Nanna teaser out now

மிருணாள் தாகூருக்கு நானாவான நானி: ஹாய் நான்னா என நானியின் குழந்தை டீசர் முழுக்க அழைத்து வரும் என்று பார்த்தால் நடிகை மிருணாள் தாகூர் நானியை ஹாய் நான்னா என அழைத்து கிண்டல் செய்து வருகிறார். மிருணாளிடம் நானி காதல் சொல்ல, அவர் இன்னொருவரை திருமணம் செய்து கொள்ள, கணவரை பிரியும் மிருணாள் மனைவி இல்லாமல் குழந்தையை வளர்க்கும் நானியிடம் மீண்டும் நெருங்கி பழகும் கதையாக இந்த படத்தை சவுரியூவ் உருவாக்கி உள்ளார்.

லிப் லாக்: படத்தில் கெட்ட வார்த்தை வைக்கக் கூடாது, சிகரெட் பிடிக்கக் கூடாது பசங்க கெட்டுப் போயிடுவாங்கன்னு ஒரு பக்கம் எதிர்க்கும் அதே நேரத்தில் லிப் லாக் காட்சிகள் சர்வ சாதாரணமாக இடம்பெற்று வருவதை கண்டிக்க யாருமே இல்லையா? என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது. அனிமல் டீசரை தொடர்ந்து ஹாய் நான்னா டீசரிலும் ஒரே லிப் லாக் சீன் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X