Nani: டோலிவுட் செல்லும் ‘டான்’ இயக்குநர்... நானி, பூஜா ஹெக்டே கூட்டணியில் செம்ம மாஸ் சம்பவம்
சென்னை: சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சிபி சக்கரவர்த்தி. அவரது அடுத்தப் படம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
டோலிவுட் செல்லும் டான் இயக்குநர்
கடந்தாண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் கமர்சியலாக ஹிட் அடித்தது. சிவகார்த்திகேயனுடன் எஸ்ஜே சூர்யா, ப்ரியங்கா மோகன், சமுத்திரகனி, சூரி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். டான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருந்தார் சிபி சக்கரவர்த்தி.

தனது அனுபவத்தையே படமாக இயக்கி அதில் வெற்றியும் பெற்றிருந்தார். இதனால் டான் படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டியிருந்தனர். இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்திருந்தார் சிபி சக்கரவர்த்தி. மேலும் அவருக்காக ஒரு கதை கூறியதாகவும் விரைவில் ரஜினி - சிபி சக்கரவர்த்தி கூட்டணி இணையும் என்றும் எதிர்பார்கக்ப்பட்டது.
இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கூட்டணியா என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். ஆனால், கடைசி நேரத்தில் இக்கூட்டணி இணையவில்லை என்பது உறுதியானது. ரஜினி தசெ ஞானவேல், லோகேஷ் கனகராஜ் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகிவிட்டார். இதனால் சிபி சக்கரவர்த்தியின் அடுத்தப் படம் குறித்தும், அவரது ஹீரோ யார் என்றும் எதிர்பார்ப்பு காணப்பட்டது.
இந்நிலையில் சிபி சக்கரவர்த்தி தற்போது டோலிவுட்டில் என்ட்ரியாக உள்ளாராம். அதன்படி, சிபி சக்கரவர்த்தியின் புதிய படத்தில் நானி ஹீரோவாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. நானியின் நடிப்பில் தசரா, ஹாய் நன்னா படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதனையடுத்து தனது அடுத்தப் படத்துக்கான கதையை ஏற்கனவே கேட்டு வந்தார் நானி.
அதில் சிபி சக்கரவர்த்தி சொன்ன கதை ஓக்கே என அவர் டிக் செய்துள்ளாராம். இந்தப் படத்தில் நானி ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நானி, பூஜா ஹெக்டே, சிபி சக்கரவர்த்தி கூட்டணி உறுதியாகிவிட்டதாகவும், இதுபற்றி விரைவில் அபிஸியலாக அறிவிக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் முதன்முறையாக தெலுங்கிலும் அறிமுகமாகவுள்ளார் சிபி சக்கரவர்த்தி.


Click it and Unblock the Notifications











