நானிக்கே நாமம் போட்ட பக்கா திருடன்.. 18 மணி நேரத்துக்கு முன்னாடியே.. டோலிவுட் பகீர்!
சென்னை: திரைத்துறையினர் வேண்டுகோள், அதைக் கடந்து அவர்களே சில இடங்களில் நேரடியாக களத்திற்குச் சென்று பைரசி பிரச்னைகளை தீர்க்க முயற்சித்தாலும், இந்த பிரச்னை முடிந்த பாடில்லை. காவல்துறையும் என்னதான் முயற்சிகளும் நடவடிக்கைகளும் எடுத்தாலும் இந்த பிரச்னை இதுவரை தீர்க்க முடியாத பிரச்னையாக உள்ளது. இப்படி இருக்கையில் நடிகர் நானி நடிப்பில் கடைசியாக வெளியான படமான ஹிட் படத்தை, படத்தின் தியேட்டர் ரிலீஸ்க்கு முன்னர் 18 மணி நேரத்திற்கு முன்னதாகவே ஐபொம்மா வலைதளத்தில் ஹெச்.டி தரத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்கள் என்று ஹைதராபாத் காவல்துறையே தெரிவித்துள்ளது. இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் ராக்கர்ஸ் டீம் எப்படி பைரசி மூலம் சினிமாக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வந்ததோ அதேபோல், இன்றைக்கு பல பைரசி டீம்கள் உருவாகிவிட்டன. அதுவும் டெலிகிராம் போன்ற செயலிகள் வந்த பின்னர் இந்த பைரசிகள் என்பது மிகவும் அதிகரித்துவிட்டது. தியேட்டரில் இருந்து படங்களை பதிவு செய்து அதை இணையத்தில் பகிர்வது மட்டும் இல்லாமல், ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் படங்கள், வெப் சீரிஸ்கள் என அனைத்தையும் டெலிகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த பிரச்னை திரைத்துறையினருக்கு உலகம் முழுவதும் பெரும் பிரச்சனையாக தான் உள்ளது.

18 மணி நேரத்துக்கு முன்னர்: இப்படி இருக்கும்போது ஹைதராபாத் காவல்துறை தெரிவித்துள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அதாவது கடைசியாக நடிகர் நானி நடிப்பில் வெளியான படமான ஹிட் படத்தின் ஹெச்.டி தரத்திலான முழு படமும் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்கள். அதுவும் படம் தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு 18 மணி நேரங்களுக்கு முன்னதாக படத்தை இணையத்தில் பதிவேற்றி உள்ளார்கள். இது படக்குழுவினருக்கே மிகவும் தாமதமாகத்தான் தெரிந்துள்ளது.
படக்குழு சந்தேகம்: தொடக்கத்தில், படக்குழுவில் இருந்த யாரோ ஒருவர்தான் படத்தை லீக் செய்ய உதவி உள்ளார்கள் என படக்குழுவினர் நினைத்துக் கொண்டு இருந்துள்ளார்கள். இப்படி இருக்கும்போது ஹைதராபாத் சைபர் கிரைம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ரவி என்பவர்தான், சர்வரை ஹேக் செய்து படத்தை டவுன்லோடு செய்து ஐபொம்மாவில் பதிவேற்றம் செய்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்கள்.

ஷாக்: இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது மட்டும் இல்லாமல் ஷாக் கொடுத்துள்ளது. இது தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்த பேச்சு தெலுங்கு சினிமாவில் மட்டும் இல்லாமல், தென்னிந்திய சினிமா முழுவதும் பரபரப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











