நெட்பிளிக்ஸில் கூட இல்லை.. ஷியாம் சிங்கா ராய் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!
சென்னை: நடிகர் நானியின் ஷியாம் சிங்கா ராய் படத்தின் டெலிடட் சீனை படக்குழு தங்களது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியான ஷியாம் சிங்கா ராய் திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஒடிடியில் வெளியாகி உள்ளது.
தியேட்டரில் படத்தை பார்க்காத பலரும் ஒடிடி தளத்தில் பார்த்து படத்தை கொண்டாடி வருகின்றனர்.

நெட்பிளிக்ஸில் நானி படம்
ராஜமெளலியின் நான் ஈ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் நானி. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெர்சி திரைப்படம் ஏகப்பட்ட விருதுகளை குவித்த நிலையில், பாலிவுட்டிலும் ரீமேக் ஆகி உள்ளது. இந்நிலையில், அவர் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ஷியாம் சிங்கா ராய் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி உள்ளது.

புரட்சிகரமான பத்திரிகையாளர்
ஷியாம் சிங்கா ராய் கதாபாத்திரத்தில் புரட்சிகரமான பத்திரிகையாளராக நடிகர் நானி நடித்துள்ளார். இயக்குநர் ராகுல் சங்க்ரீத்யன் இயக்கத்தில் உருவான இந்த படம் தற்போது உலகளவில் ஒடிடி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளி வருகிறது. தலீத் பிரச்சனை, தேவதாசி பிரச்சனை என ஏகப்பட்ட பிரச்சனைகளை எதிர்க்கும் புரட்சியாளராக நடித்துள்ளார் நானி.

அனேகன் படத்தை போல
மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமைரா தஸ்தூர் நடிப்பில் வெளியான அனேகன் படத்தை போல இந்த படத்திலும் பூர்வ ஜென்ம கதையும் சைக்காட்ரிஸ்ட் மூலமாக அந்த கதை வெளியே வருவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. நடிகர் நானியின் நடிப்பு மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு இரண்டாம் பாதியில் ரசிகர்களை அப்படியே கட்டிப் போட்டு விடுகிறது.
Recommended Video

தேவதாசியாக சாய் பல்லவி
தேவதாசியாக நடிகை சாய் பல்லவி இந்த படத்தில் மிரட்டி உள்ளார் என்றே சொல்ல வேண்டும். அதுவும் நவராத்திரி விழாவில் நடைபெறும் அந்த பாடல் காட்சிகளில் அவர் நடனமாடும் காட்சிகள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. அதே போல கிளைமேக்ஸ் காட்சியில் நானியும் சாய் பல்லவியும் சந்திக்கும் அந்த காட்சியும் ரசிகர்களை கண்கலங்க வைத்தது.
நெட்பிளிக்ஸிலும் இல்லை
ஒடிடி தளத்தில் எந்தவொரு காட்சியும் டெலிட் செய்யாமல் படங்கள் வெளியாகி வரும் நிலையில், எடிட்டிங்கிலேயே நீக்கப்பட்ட ஒரு சூப்பரான காட்சியை தற்போது நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஷியாம் சிங்கா ராய் தேவதாசிகளிடம் ஏற்கனவே சகஜமாக பேசுவது போல இருக்கும் அந்த காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











