மிரட்டும் வில்லனாக நானி.. 25வது திரைப்படம் "வி" ஓடிடியில் ரிலீஸ்!

ஹைதராபாத் : நடிகர் நானி தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக உள்ள நிலையில் தமிழிலும் ஓரிரு திரைப்படங்களில் நடித்து பிரபலமாக உள்ளார்.

தனது நேச்சுரலான நடிப்பின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் நானி நடித்த திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில், விரைவில் வெளியாக இருக்கும் இவரது 25வது திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுவரை ஹீரோ கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்த நானி முதன்முறையாக முரட்டுத்தனமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தத் திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது.

ராஜமௌலி இயக்கியிருந்த

ராஜமௌலி இயக்கியிருந்த

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மற்றும் தெலுங்கில் ஒருசேர உருவான "நான் ஈ" என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் மிகப் பிரபலமான நடிகராக பரிச்சயமானவர் நடிகர் நானி. பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கியிருந்த இந்த திரைப்படம்,'ஈ'யை மையமாகக்கொண்டு உருவானதையடுத்து இந்திய திரைப்படத் துறையினர் அனைவரையும் இத்திரைப்படம் ஆச்சரியப்பட வைத்தது.

வில்லன் கதாபாத்திரத்தில்

வில்லன் கதாபாத்திரத்தில்

இவ்வாறு" நான் ஈ" திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பரிச்சயமான நடிகராக நானி. அதற்கு முன் " வெப்பம்" என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைத்துறைக்கு முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டார். இந்நிலையில் தெலுங்கில் பல வெற்றிப்படங்களை தனது இயல்பான நடிப்பின் மூலம் கொடுத்து பலகோடி ரசிகர்களை கொண்டுள்ள நானி முதல் முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் தனது 25வது திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஓடிடியில் வெளியாகிறது

ஓடிடியில் வெளியாகிறது

"வி" என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம் கடந்த மார்ச் மாதமே திரையில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், எதிர்பாராமல் இந்தியாவில் பரவிய கொரானா நோய் தொற்று காரணமாக தற்போது வரை வெளியிடப் படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் "வி" திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது என சில மாதங்களாகவே தகவல்கள் பரப்பப்பட்ட நிலையில் தற்பொழுது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் மோகன் கிருஷ்ணா

இயக்குனர் மோகன் கிருஷ்ணா

நடிகர் நானி முதல்முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டல் நடிப்புடன் நடித்திருக்க, இதில் சுதீர் பாபு, நிவேதா தாமஸ், அதிதி ராவ் மற்றும் நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்தப்படத்தை இயக்குனர் மோகன் கிருஷ்ணா இந்திராகாந்தி இயக்கி இருக்க, இசையமைப்பாளர் தமன் பின்னணி இசைக்கோர்ப்பும், அமித் திரிவேதி பாடல்களுக்கும் இசை அமைப்பு செய்துள்ளனர்.

செப்டம்பர் மாதம்

செப்டம்பர் மாதம்

இவ்வாறு நானி முதல் முறையாக வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் திரைப்படம் என்ற பெருமையையும், நானியின் 25வது படம் என்ற பெருமையையும் கொண்டுள்ள "வி " திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் திரையில் காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த படம் ஓடிடியில் வெளியாகிறது என்ற அதிகாரப்பூர்வ தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் இத்திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Read more about: nani நானி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X