இந்த அன்பு போதும்.. பிறந்த நாள் அதுவுமா நானி போட்ட வீடியோ.. செம வைரல்!

ஹைதராபாத்: வெப்பம், நான் ஈ, கேங் லீடர், ஜெர்ஸி உள்ளிட்ட படங்களில் நடித்த டோலிவுட் நடிகர் நானி, நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

Recommended Video

இது என்னயா, 96 பட ரீமேக்கிற்கு வந்த சோதனை?- வீடியோ

பிறந்த நாளை முன்னிட்டு, தனது குழந்தையுடன் இருக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்ட நடிகர் நானி, தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன ரசிகர்களுக்கு, நன்றி தெரிவித்தார்.

36 வயதினிலே

36 வயதினிலே

டோலிவுட் சினிமாவின் இளம் ஹீரோவாக வலம் வரும் நடிகர் நானிக்கு 36 வயதாகிறது. 1984ம் ஆண்டு, பிப்ரவரி 24ம் தேதி பிறந்த நானி, 2008ம் ஆண்டு வெளியான ஆஸ்தா சம்மா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். ரேடியோ ஜாக்கியாக இருந்த நானி, தனது விடா முயற்சி மற்றும் கடின உழைப்பால், முன்னணி ஹீரோவாக மாறியுள்ளார்.

நான் ஈ

நான் ஈ

நானி பெயர் வரும் படியான நான் ஈ படம் தான், நானிக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. படத்தில் அதிக காட்சிகளில் நானி நடிக்கவில்லை என்றாலும், படம் முழுக்க ஈயாக வந்து மிரட்டி இருப்பார். ராஜமெளலி இயக்கத்தில் வெளியான இந்த படம், நானியை தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக்கியது.

ஜெர்ஸி

ஜெர்ஸி

நானி நடிப்பில் வெளியான ஜென்டில்மேன், நேனு லோக்கல், மிடில் கிளாஸ் அப்பாயி மற்றும் கேங் லீடர் உள்ளிட்ட படங்கள் ஹிட் படங்களாக அமைந்தாலும், நானிக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம் என்றால், அது கடந்த ஆண்டு வெளியான ஜெர்ஸி படம் தான். கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையையும் வலியையும் நானி அழகாக கடத்தி இருந்தார்.

மகனுடன்

நடிகர் நானி, தனது 36வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். சமூக வலைதளங்களில் பிரபலங்கள், ரசிகர்கள் என அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், தனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, தனது 2 வயது மகனுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை பதிவிட்டு நன்றி சொல்லியிருந்தார்.

அடுத்து என்ன படம்

அடுத்து என்ன படம்

ஜெர்ஸி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நானி நடிப்பில் ‘வி' என்ற படம் உருவாகி உள்ளது. மேலும், நானியின் பிறந்த நாள் பரிசாக, அவரது 27வது படத்தின் டைட்டில் "ஷியாம் சிங்கா ராய்" என்பது நேற்று அறிவிக்கப்பட்டது. சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாக உள்ள இந்த படத்தை டாக்ஸி வாலா படத்தை இயக்கிய ராகுல் சங்க்ரித்யான் இயக்குகிறார்.

More from Filmibeat

Read more about: nani நானி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X