வாயில பீடி... லுங்கியை ஏத்தி கட்டி… புஷ்பா பாணியில் நானி நடிக்கும் ‘தசரா‘
சென்னை : நானி நடிக்கும் தசரா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் டீசர் வெளியாகி உள்ளது.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

தசரா
நடிகர் நானி தொடர்ந்து வித்தியாசமான களங்களில், தரமான வகையிலான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஷியாம் சிங்க ராய் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது நானி அறிமுக இயக்குனர் ஶ்ரீகாந்த ஒடெலா இயக்கத்தில் உருவாகி வரும் 'தசரா' படத்தில் நடித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷ்
ஶ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்ட படைப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறார். தேசிய விருது வென்ற நாயகி கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

லுங்கியை ஏத்திக்கட்டி
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் இன்று வெளியானது. அந்த போஸ்டரில் சிவப்பு சட்டையில் பட்டனை கழட்டி விட்டு, வாயில் பீடி வைத்துக்கொண்டு, லுங்கியை ஏத்தி கட்டி பார்ப்பதற்கு மெர்சலாக இருக்கிறார். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அவர் ஞாபகம் வருது
மேலும், நானி தனது ட்விட்டரில் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். மேலும், அதில், தசரா கோபத்தில் இருந்து தரணி உண்மையானது என பதிவிட்டுள்ளார். நானியின் ரசிகர்கள் அவரது பிரம்மாண்டமான அவதாரத்தை பார்த்து, புஷ்பா படத்தில் வரும் அல்லு அர்ஜுனுடன் ஒப்பிட்டு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும், படத்தின் அமைப்பு யாஷின் கேஜிஎஃப்-ஐ மக்களுக்கு ஞாபகப்படுத்துவதாகவும் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











