Surya's Saturday BOC: தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த சூர்யாஸ் சாட்டர்டே.. முதல் நாள் வசூல் விபரம்!

ஹைதராபாத்: தனது ரசிகர்களுக்கு எப்போது நல்ல எண்டர்டைமெண்ட்டையும் தயாரிப்பாளர்களுக்கு மினிமம் கேரண்டி கொடுக்கும் கதைகளாகவே தேர்வு செய்து நடிப்பவர் வளர்ந்து வரும் நடிகர் நானி. தெலுங்கு சினிமாவில் நானி தவிர்க்க முடியாதவர் என்றாலும் தமிழ் நாட்டிலும் கவனிக்கப்படும் நடிகராக உள்ளார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி மாபெரும் ஹிட் படங்களாக அமைந்த தசரா மற்றும் ஹாய் நன்னா ஆகிய படங்களுக்குப் பின்னர், சூர்யாஸ் சாட்டர்டே அதாவது சூர்யாவின் சனிக்கிழமை எனும் படம் ரிலீஸ் ஆனதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்தப் படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் வசூல் விபரம் குறித்து பார்க்கலாம்.

படத்தின் கதாநாயகனான சூர்யா அதாவது நானி மிகவும் கோபக்காரர். இவரது அடக்க முடியாத கோபத்தால் இவரது பெற்றோர்கள் மிகவும் வருத்தத்திற்கு ஆளாகின்றனர். மேலும் தனது மகனுக்கு உள்ள கோபத்தை கட்டுப்படுத்த என்ன செய்வது எனத் தெரியாமல் தவிக்கும் அவரது தாய், இறுதியில் ஒரு முடிவு எடுக்கின்றார். அதாவது வாரம் முழுவதும் கோபத்தை அடக்கிக் கொள்ள வேண்டும். சனிக்கிழமை மட்டும் கோபத்தை வெளிப்படுத்தலாம் என சூர்யாவிடம் சத்தியம் கேட்கிறார் அவரது தாயார். சூர்யாவும் இதற்கு ஒப்புக்கொண்டு சத்தியம் செய்துவிட்டு, சனிக்கிழமை மட்டும் தனது கோபத்தை வெளிப்படுத்துகின்றார்.

nani

கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் சில காட்சிகள் எமோஷ்னலாகவும், சில காட்சிகள் நகைச்சுவையாகவும் அமைந்ததால் ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு பேக்கேஜ் எண்டர்டைனராக மாறியுள்ளது. இதுமட்டும் இல்லாமல், படத்தில் வில்லனாக வரும் எஸ்.ஜே. சூர்யா, சோகுல பாலம் எனும் இடத்திற்கு காவல் அதிகாரியாக உள்ளார். இவருக்கு கோபம் வரும்போது எல்லாம் அங்குள்ள அப்பாவி மக்களை தூக்கிக் கொண்டு போய் அவர்களைத் தாக்கி, தனது கோபத்தை தீர்த்துக் கொள்கின்றார்.

மோதல்: இந்த விஷயத்தை தனது காதலி பிரியங்கா மோகன் மூலம் தெரிந்து கொள்ளும் நானி, சோகுல பாலமிடமிருந்து மக்களை எப்படி காப்பாற்றுகின்றார். சனிக்கிழமை மட்டும் கோபத்தை வெளிப்படுத்தும் கதாநாயகன், எப்போது கோபம் வந்தாலும் அதனை உடனே தனித்துக் கொள்ளும் வில்லன், இவர்களுக்கு இடையிலான மோதல் எப்படி சரி ஆகின்றது, என்பது மீதி கதையாக உள்ளது.

nani

எஸ்.ஜே. சூர்யா: படம் பார்த்த அனைவரும் படத்தை பாராட்டிக்கொண்டு உள்ளனர். குறிப்பாக நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா தனது அசாத்திய நடிப்பால், அனைவரையும் கவர்ந்து விட்டார். படம் குறித்து பேசும் அனைவரும் எஸ்.ஜே. சூர்யாவின் அரக்கத்தனமான நடிப்பை வெகு நேரம் பாராட்டுகின்றனர். படம் தெலுங்கில் மட்டும் இல்லாமல் தமிழில் டப் செய்யப்பட்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த வாரம் தமிழ் சினிமாவில் வேறு எந்த படங்களும் ரிலீஸ் ஆகாத காரணத்தால், சூர்யாஸ் சாட்டர்டே படம் தமிழ் ரசிகர்களின் தேர்வாகிப் போனது.

nani

வசூல்: படம் பார்த்த அனைவரும் படத்தை பாராட்ட, படத்தின் மார்கெட் தமிழ் சினிமாவிலும் உயரத் தொடங்கியுள்ளது. படம் முதல் நாளில் ரூபாய் 9 கோடி வசூல் செய்துள்ளது என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்பதால் படக்குழு படத்தின் வெற்றியைக் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: nani நானி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X