Saripodhaa Sanivaaram X Review: நானி, எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன் நடித்த படம் எப்படி இருக்கு?
சென்னை: Saripodhaa Sanivaaram என்கிற டைட்டிலில் தெலுங்கிலும் Suriya's Saturday என்கிற தலைப்பில் தமிழிலும் வெளியாகி உள்ள நானியின் படம் குறித்த விமர்சனங்கள் ட்விட்டர் பக்கத்தில் குவிந்து வருகின்றன. விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி, எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
நேச்சுரல் ஸ்டார் என தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்படும் நானி நடிப்பில் கடைசியாக வெளியான ஹாய் நானா திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை.

இந்த படத்தின் டிரெய்லரை பார்த்த தமிழ் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தின் வாடை அடிக்குதே என கமெண்ட்டுகளை பதிவிட்டு வந்தனர். சனிக்கிழமை ஆனால், அதீத சக்தி வந்து எவன் வந்தாலும் தூக்கிப் போட்டு அடிக்கும் ஆற்றல் கொண்டவராக நானி மாறுவதாக டிரெய்லரில் காட்டிய நிலையில், அந்த படம் எப்படி இருக்கு என்றும் அந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனங்களையும் இங்கே காணலாம்.
பான் இந்தியா படம்: நானி, எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியாகியுள்ள இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகியுள்ளன. தமிழில் இந்த வாரம் எந்தவொரு பெரிய படங்களும் வெளியாகாத நிலையில், நானி படத்துக்கு தமிழ்நாட்டிலும் நல்ல வியாபாரம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வில்லனாக எஸ்.ஜே. சூர்யா, க்யூட்டான கான்ஸ்டபிளாக பிரியங்கா மோகன் நடித்துள்ள நிலையில், தமிழ் ஆடியன்ஸ் மத்தியிலும் இந்த படம் வரவேற்பை பெற்றுள்ளது. ஷியாம் சிங்கா ராய் படத்தில் இருந்தே பான் இந்தியா ரசிகர்களை டார்கெட் செய்து வரும் நானி தசரா படத்தை தொடர்ந்து இந்த படத்தையும் பான் இந்தியா படமாகவே கொடுத்துள்ளதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

போர் அடிக்குது: எஸ்.ஜே. சூர்யா மற்றும் நானியின் நடிப்புக்காக மட்டும் தான் இந்த படத்தை தியேட்டரில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டும் என்று சொல்வேன். ஆனால், இயக்குநர் விவேக் ஆத்ரேயா ரைட்டிங்கில் பல இடங்களில் கோட்டை விட்டு விட்டார். செகண்ட் ஹாஃப் எல்லாம் ரொம்பவே போர் அடிக்குது என இந்த ரசிகர் கலவையான விமர்சனத்தை கொடுத்துள்ளார்.
பக்கா மாஸ்: நானி, பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் நடிப்பு மிரட்டுகிறது. ஒளிப்பதிவு தரமாக உள்ளது. ஹை ஆக்டேன் சண்டைக் காட்சிகள் எல்லாம் தியேட்டரில் விசில் பறக்கின்றன. பக்காவான மாஸ் கமர்ஷியல் படம் என இந்த ரசிகர் பாசிட்டிவ் விமர்சனத்தைக் கொடுத்துள்ளார்.
பிரியங்கா மோகனுக்காகவே பார்க்கலாம்: நானி, எஸ்.ஜே. சூர்யாவை எல்லாம் விட்டுத் தள்ளுங்க தலைவி பிரியங்கா மோகனுக்காகவே இந்த படத்தை தாராளமா பார்க்கலாம். திரையுலகில் அடுத்தடுத்த இடத்துக்கு முன்னேறிக் கொண்டே செல்கிறார் என பிரியங்கா மோகனின் ரசிகர் விமர்சனம் கொடுத்துள்ளார்.
எஸ்.ஜே. சூர்யா எக்ஸ்ட்ராடினரி: நானி நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் சரிபோதா சனிவாரம் படம் ரொம்பவே சுமாரான கமர்ஷியல் படம் தான். ஆனால், அதில், எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு தான் எக்ஸ்ட்ராடினரி. 5க்கு 2.5 ரேட்டிங் கொடுக்கலாம் என இந்த ரசிகர் மார்க் வரை போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











